- Home
- Gallery
- தயவு செய்து 'GOAT' அப்டேட் கேட்காதீர்கள்! பெருசா நடக்கும் பிளான்.? இயக்குனர் வெங்கட் பிரபு போட்ட கூறிய காரணம்!
தயவு செய்து 'GOAT' அப்டேட் கேட்காதீர்கள்! பெருசா நடக்கும் பிளான்.? இயக்குனர் வெங்கட் பிரபு போட்ட கூறிய காரணம்!
தளபதி விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து 'கோட்' படத்தின் அப்டேட் கேட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவை நச்சரித்து வரும் நிலையில், தயவு செய்து யாரும் அப்டேட் கேட்க வேண்டாம் என கூறி அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'லியோ'. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இந்த படத்தில், திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், மிஷ்கின், மடோனா செபஸ்டின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், ஒரு சில ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என, ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினர்.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய், யார் இயக்கத்தில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதிரடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகின்றனர்.
GOAT Poster
அதேபோல் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, போன்ற நடிகைகளும்... மோகன், ஜெயராம், யோகி பாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படம், குறித்து தளபதியின் ரசிகர்கள் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவிடம், அப்டேட் கேட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைதளத்தில், இப்போதைக்கு யாரும் அப்டேட் கேட்க வேண்டாம் என கூறியுள்ளதோடு... நீங்கள் எதிர்பாராத மாஸ் அப்டேட் ஒன்று விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், 'கோட்' படத்திற்காக ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கிராபிக்ஸ் பணி குழுவிடம் கிராபிக்ஸ் பணிகளில் ஒரு பகுதியும், இந்தியாவில் உள்ள ஐந்தாறு நிறுவனங்களில் சில கிராபிக்ஸ் பணிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்போதைக்கு அப்டேட் யாரும் கேட்க வேண்டாம். அதே நேரம் ஏதேனும் பண்டிகையின் போது சாதாரண போஸ்டரை வெளியிடாமல், ஒரு மிகப்பெரிய அப்டேட் கொடுக்க பிளான் செய்து வருவதாகவும்... தெரிவித்துள்ளார் இந்த தகவல் தளபதி ரசிகர்களை உச்சாகப்படுத்தியுள்ளது.