- Home
- Gallery
- பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளும் பெண் குறித்து பரவிய வதந்தி! முற்று புள்ளி வைத்த இயக்குனர் வெங்கட் பிரபு!
பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளும் பெண் குறித்து பரவிய வதந்தி! முற்று புள்ளி வைத்த இயக்குனர் வெங்கட் பிரபு!
இயக்குனரும், பிரேம் ஜி அமரனின் மூத்த சகோதரருமான வெங்கட் பிரபு பிரேம் ஜி அமரனின் திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் குறித்து பரவி வந்த வதந்திக்கு, அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Premgi
இசைஞானி இளையராவின் சகோதரர் கங்கை அமரனின் மகன் பிரேம் ஜி அமரனுக்கு... எப்போது திருமணம் நடக்கும் என கேள்வியை எழுப்பாதவர்களே இல்லை. ஆனால் அவரும் ஏதேதோ காரணம் கூறி திருமணத்தை தட்டி கழித்து, பேச்சிலர் வாழ்க்கையை அனுபவித்து வந்த நிலையில், கடந்த மாதம் திடீர் என விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் என கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
Premgi
இதை தொடர்ந்து பிரேம் ஜி-க்கு ஜூன் 9-ஆம் தேதி... திருத்தணி முருகன் கோவிலில் இந்து என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக திருமண அழைப்பிதழ் ஒன்று வெளியானது. இதை தொடர்ந்து நெட்டிசன்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் பலர் பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் யார்? என தேட துவங்கிய நிலையில், சிலர் அவர் மீடியாவை சேர்ந்த பெண் என கூறி வதந்திகளை பரப்பினர்.
இது போன்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது.. "இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும், எனக்கும், ஆதரவையும்.. அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.
venkat prabhu
எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. பாகுபலி கட்டப்பா ஏன் கொன்றார்? சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா? இது எல்லாவற்றையும் விட பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ என்ற உங்கள் கேள்விக்கு பதில் வரும் 9-ஆம் தேதி கிடைத்துவிடும். சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருகிய நண்பர்கள் முன்னிலையில் பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவினர்களுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்.
இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமண பத்திரிகையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விட்டார். எப்படி கல்யாண பத்திரிக்கை வைரலானதோ அதேபோல் மணமகள் மீடியாவை சேர்ந்தவர் என்று கூறி புகைப்படங்கள் உலா வருகின்றன. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களை பகிர்வேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி, அதையும் வைரலாகுமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம். தி கோட் அப்டேட் விரைவில் என வெங்கட் பிரபு இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.