- Home
- Gallery
- Premgi : களைகட்டிய பிரேம்ஜியின் பேச்சிலர் பார்ட்டி... படையெடுத்து வந்து கலந்து கொண்ட கோலிவுட் பிரபலங்கள்
Premgi : களைகட்டிய பிரேம்ஜியின் பேச்சிலர் பார்ட்டி... படையெடுத்து வந்து கலந்து கொண்ட கோலிவுட் பிரபலங்கள்
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி தன்னுடைய திரையுலக நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார்.

Premgi
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் தான் பிரேம்ஜி. இவர் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனதற்கு முக்கிய காரணம் அவரது அண்ணன் வெங்கட் பிரபு தான். ஏனெனில் அவர் இயக்கும் படங்களில் ஹீரோயின் இருக்கிறாரோ, இல்லையோ நிச்சயம் பிரேம்ஜி இருப்பார். வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் தொடங்கி தற்போது உருவாகி வரும் கோட் படம் வரை பிரேம்ஜி இல்லாமல் அவர் படம் எடுத்ததே இல்லை.
premgi Amaran
அதுவும் தனது படங்களில் பிரேம்ஜிக்கு பெரும்பாலும் ஹீரோவுடனே பயணிக்கும் கதாபாத்திரங்களையே ஒதுக்கி இருப்பார் வெங்கட் பிரபு. இவர் நடிகராக மட்டுமின்றி வெங்கட் பிரபுவின் படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். அவர் இயக்கிய ஆர்.கே.நகர், மன்மதலீலை போன்ற படங்களுக்கு இசையமைத்தது பிரேம்ஜி தான். அதுமட்டுமின்றி இவர்கள் கூட்டணியில் உருவான பார்ட்டி என்கிற திரைப்படம் இன்னும் ரிலீஸாகாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... “கண்டிப்பா 2-வது திருமணம் செய்வேன்.. தாம்பத்திய வாழ்க்கை வேணும்..” 42 வயது பிரபல நடிகை ஓபன் டாக்..
Premgi Wedding Invitation
அதுமட்டுமின்றி பிரேம்ஜியை பார்க்கும் போதெல்லாம் அவரிடம் அனைவரும் முன்வைக்கும் கேள்வி எப்போ கல்யாணம் என்பது தான். அவரது கல்யாணம் பற்றி பல்வேறு வதந்திகள் வெளிவந்தாலும் 40 வயதைக் கடந்தும் முரட்டு சிங்கிளாக வலம் வந்தார் பிரேம்ஜி. அண்மையில் அவருக்கு இந்து என்கிற பெண்ணோடு திருமணம் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டு பத்திரிகை ஒன்றும் வெளியானது. வழக்கம்போல் இதுவும் வதந்தியாக இருக்கும் என ரசிகர்கள் கருதினர்.
premgi Bachelor Party
ஆனால் அது உண்மை என்பதை இயக்குனர் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தினார். அவரது திருமணம் ஜூன் 9ந் தேதி நடைபெற உள்ளதாகவும் இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாகவும் வெங்கட் பிரபு கூறி இருந்தார். சிங்கிளாக இருந்தாலே பார்ட்டி பண்ணும் பிரேம்ஜி, திருமணம் என்றால் சும்மா விடுவாரா என்ன, தனது திரையுலக நண்பர்களுக்கு தடபுடலாக பேச்சிலர் பார்ட்டி வைத்து அசத்தி இருக்கிறார். இதில் பாடகர் சரண், பிக்பாஸ் பிரபலம் யுகேந்திரன், நடிகர்கள் ஜெய், வைபவ், தயாரிப்பாளர் டி சிவா, இயக்குனர் வெங்கட் பிரபு என கோலிவுட் படையே கலந்துகொண்டுள்ளது. அப்போது எடுத்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... திடீரென செப்டம்பர் மாதத்திற்கு தாவிய அமரன் படம்; Box Office-ல் தளபதிக்கே தண்ணிகாட்ட போகிறாரா சிவகார்த்திகேயன்?