வீடு கட்டும் போது வெள்ளி நாகம் ஏன் வைக்க வேண்டும் தெரியுமா..? வாஸ்து சொல்வது இதுதாங்க!
வாஸ்து சாஸ்திரம்படி, வீடு கட்டுவதற்கு முன்பு வெள்ளி நாகம் வைப்பதற்கான காரணம் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்..

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் வாஸ்துப்படி தான் தங்களது ஒவ்வொரு காரியத்தையும் செய்வார்கள். அவற்றில் ஒன்றுதான் வீடு கட்டுவது.
ஆம், இந்துக்கள் சம்பிரதாயத்தின் படி, ஒருவர் வாஸ்துபடி தான் வீடு கட்ட வேண்டும். அப்படி கட்டவில்லை என்றால், அந்த வீட்டில் மகிழ்ச்சி தங்காது என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் அவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு கதவு, ஜன்னல் அறை போன்றவற்றை வாஸ்துப்படி அமைக்கிறார்கள்.
அதுபோல, வீடு கட்டுவதற்கு முன் அஸ்திவாரத்தின் போது பூமியில் வெள்ளி பாம்புகள் (அ) கலசங்கள் வைப்பார்களாம். இதுவே, வீடு கட்டுவதற்கு முதல் விதி என்று சொல்லப்படுகிறது. அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா..?
இதையும் படிங்க: Vastu Tips : இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் வறுமையும், துன்பமும் உங்களை நெருங்கும்!
இதற்கான காரணம் என்னவென்றால், வாஸ்து சாஸ்திரப்படி இந்த வெள்ளி பாம்புகள் (அ) கலசங்களை வைத்தால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: வாஸ்து படி, வீட்டின் வடக்கு திசையில் இதையெல்லாம் வச்சா ஐஸ்வர்யம் பெருகுமாம்!
அதுமட்டுமின்றி, ஸ்ரீமத் பகவத் மகாபுரானின் ஐந்தாவது காண்டத்தில் பூமிக்கு அடியில் பாதாள உலகம் இருப்பதாகவும், பாதாள உலகத்தின் அதிபதி ஷேஷ்நாக் என்று சொல்லப்படுள்ளது. இதனால் தான் வெள்ளி பாம்புகள் வீட்டு கட்டும் முன்பு வைக்கப்படுகிறது. மேலும், இந்த பாம்புகள் வீட்டை பாதுகாப்பாதாகவும் சொல்லப்படுகின்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D