VarunLav: இத்தாலியில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம்! திருமண போட்டோஸ்!
மெகா இளவரசன் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நேற்று மாலை இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஜோடி திருமண புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகிறது.
மெகா இளவரசர் என டோலிவுட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும், வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி கடந்த ஐந்து வருடங்களாக, ரகசியமாக காதலித்து , சமீபத்தில் தங்களுடைய காதலை அறிவித்தது மட்டும் இன்றி, விரைவில் திருமணம் நடைபெற உள்ளதையும் உறுதி செய்தனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம், மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்த நிலையில், தற்போது திருமணம் இவர்கள் 'மிஸ்டர்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்த போது, காதலை வெளிப்படுத்திய இத்தாலியில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதன்படி, இவர்களது திருமணம், நேற்று மாலை ஏழு மணி 18 நிமிடங்களில் நடந்துள்ளது. வருண் தேஜ் தன்னுடைய குடும்ப முறைப்படி, லாவண்யா திரிபாதியை காரணப்பிடித்தார்.
இதை தொடர்ந்து இவர்களின் திருமணம் புகைப்படங்கள் வெளியாக, ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
Trisha: 'லியோ படத்தில் என்னை கொல்லாமல் இருந்ததற்கு நன்றி! திரிஷா பேச்சு!
வருண் தேஜ் கிரீம் கலர் ஷர்வானி அணிந்திருந்த நிலையில், லாவண்யா சிவப்பு நிற காஞ்சிபுர பட்டுப்புடவை அணிந்திருந்தார். இதில் பட்டால் உருவாக்கப்பட்ட இழைகளால் டிசைனர் புடவை போல்... இந்த புடவை டிசைன் செய்யப்பட்டிருந்தது ஹை லைட்.
திருமணம் முடிந்தபின்னர் வருண் தேஜ் - லாவண்யா எடுத்து கொண்ட போட்டோஸ் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது. இவர்களின் வெட்டிங் ரிசெப்ஷன், நவம்பர் 5-ஆம் தேதி, ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.