- Home
- Gallery
- அப்பா சரத்குமாரால் வரலட்சுமியின் சினிமா வாழ்க்கையும் போச்சு! காதல் வாழ்க்கையும் போச்சு.. ஷாக் கொடுத்த பிரபலம்!
அப்பா சரத்குமாரால் வரலட்சுமியின் சினிமா வாழ்க்கையும் போச்சு! காதல் வாழ்க்கையும் போச்சு.. ஷாக் கொடுத்த பிரபலம்!
தற்போது கோடிக்கணக்கில் செலவு செய்து மகளின் திருமணத்தை நடத்தும் சரத்குமார், வரலட்சுமியின் வளர்ச்சிக்கு முட்டுக்கடையாக இருந்ததாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

varalaxmi
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியின் திருமணக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வருகின்றன. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரலட்சுமி மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
varalaxmi
இந்த ஜோடிக்கு கடந்த பிப்ரவரி மாதமே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் தற்போது திருமணக் கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளது.அந்த வகையில் வரலட்சுமி – நிக்கோலாயின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நேற்றிரவு சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் கோலாகலமாக நடந்தது.
Varalaxmi
இதில் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் ராதிகா, சரத்குமார் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Varalaxmi
முன்னதாக இந்த திருமணத்திற்காக வரலட்சுமி, சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தொடங்கி ரஜினி, கமல், விஜய், சமந்தா, த்ரிஷா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கும் திருமண அழைப்பிதழ்களை வழங்கி வந்தனர்.
Actress Varalaxmi sarathkumar
நடிகர் சரத்குமார் சாயா தேவியை 1984-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சரத்குமார் – சாயா தேவி தம்பதிக்கு வரலட்சுமி, பூஜா என இரு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 2000-ம் ஆண்டு சாயாதேவியை விவாகரத்து செய்த சரத்குமார் 2001-ம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.
varalaxmi
சரத்குமார் – ராதிகா தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். ராதிகாவுக்கும் அவரின் முன்னாள் கணவர் ஹார்ட்டிக்கும் பிறந்த மகள் ரயானேவும் ராதிகாவிடம் தான் வளர்ந்தார். அவர் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை திருமணம் செய்து கொண்டார்.
varalaxmi
கோடிக்கணக்கில் செலவு செய்து மகளின் திருமணத்தை நடத்தும் சரத்குமார், வரலட்சுமியின் வளர்ச்சிக்கு முட்டுக்கடையாக இருந்ததாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். இதுகுறித்து பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் முதலில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க வேண்டியது. அந்த படத்தில் நடிக்கவிடால் சரத்குமார் தான் ஷங்கரிடம் போனில் பேசி வேண்டாம் என்று கூறினார். அதன்பின்னர் தான் அந்த படத்தில் ஜெனிலியா நடித்தார்.” என்று தெரிவித்தார்.
varalaxmi
தொடர்ந்து பேசிய அவர், விஷாலும் வரலட்சுமியும் காதலித்து வந்ததாகவும், ஆனால் நடிகர் சங்க பிரச்சனை காரணமாக சரத்குமார் தான் இவர்களின் காதலுக்கும் முட்டுக்கட்டையாக இருந்தார் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.