- Home
- Gallery
- நாளை வரலட்சுமி விரதம்.. உருவாகும் மங்களகரமான யோகம்.. பணம் மழையில் நனைய போகும் 5 ராசிகள் இவையே!
நாளை வரலட்சுமி விரதம்.. உருவாகும் மங்களகரமான யோகம்.. பணம் மழையில் நனைய போகும் 5 ராசிகள் இவையே!
Varalakshmi Vratham 2024 : நாளை வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் பல சுபயோகங்கள் உண்டாகும். இந்த சுபயோகங்களின் தாக்கத்தால் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்கள் பெறப் போகிறார்கள். அவர்கள் யார் யாரென்று இங்கு பார்க்கலாம்.

வரலட்சுமி விரதம் ஒவ்வொரு ஆண்டும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் லட்சுமி தேவியை வழிபட்டால் தேவியின் விசேஷமான ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியமைத்து செழிப்பு செல்வம் அதிகரிக்குமாம்.
அந்தவகையில், நாளை வரலட்சுமி விரதம். இந்நாளில் மங்களகரமான யோகங்கள் உருவாகிறது. இந்த யோகத்தால் 5 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு வரலட்சுமி விரத நாளில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உடல்நலக் கோராள கோளாறுகளிலிருந்து விடுபடுவீர்கள். திருமணமானவர்களின் பிரச்சனைகள் தீரும். வணிகர்கள் சிந்தித்து புத்திசாலித்தனமான ஒப்பந்தங்களில் முடித்து எதிர்காலத்தில் நல்ல லாபத்தை பெறுவார்கள்.
இதையும் படிங்க: வரலட்சுமி விரதம் 2024 : வீட்டில் கலசம் அமைக்கும் முறை பற்றி தெரியுமா?
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு வரலட்சுமி விரத நாளில் நல்ல பலன்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமண யோகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக ஒரு சொத்து வாங்கும் எண்ணத்தில் இருந்தால் இந்த நேரத்தில் அது நிறைவேறும். அரசு வேலை கனவு நினைவாகும்.
இதையும் படிங்க: Varalakshmi Vratham 2024 : திருமணமாகாத பெண்கள் வரலட்சுமி விரதம் இருக்கலாமா..? அப்படி இருந்தால் என்ன பலன்?
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு வரலட்சுமி விரத நாளில் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். இந்நாளில், விருந்தினர்கள் வீட்டிற்கு வர வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பாசம் அதிகரிக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
விருச்சகம்: விருச்சகம் ராசிக்காரர்களுக்கு வரலட்சுமி விரத நாளில் புதிய கார் வாங்க வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி சூழல் நிலவும். உழைப்பவர்களின் நிதிநிலைமை மேம்படும். இந்த காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மகரம்: மகரம் ராசிக்காரர்களுக்கு வரலட்சுமி விரதம் அதிர்ஷ்டமான பலன்களை கொடுக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய ஒப்பந்தங்களை முடிக்கலாம். பணியாளர்கள் நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப பெறுவார்கள். நண்பர்களுக்கு கொடுத்த பணம் மாலையில் திரும்ப பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண உறவு அமையும்.







