- Home
- Gallery
- தியா திருமணத்துக்கு அழைக்கவில்லை... ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய குடும்பத்தினருக்கு ஒரே பதிவில் பதிலடி கொடுத்த வனிதா
தியா திருமணத்துக்கு அழைக்கவில்லை... ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய குடும்பத்தினருக்கு ஒரே பதிவில் பதிலடி கொடுத்த வனிதா
அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் திருமணத்திற்கு தன்னை யாருமே அழைக்கவில்லை என்பதால், அவர்களுக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார் வனிதா.

vanitha vijayakumar
நடிகர் விஜயகுமாருக்கு இரு மனைவிகள். அதில் மூத்த மனைவியின் பெயர் முத்துக்கண்ணு. அவருக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள். இரண்டாவது மனைவி பெயர் மஞ்சுளா. இவர் சினிமாவிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். இவருக்கு ப்ரீத்தா, வனிதா மற்றும் ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர். மஞ்சுளா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டதால் தற்போது தன்னுடைய முதல் மனைவி முத்துக்கண்ணு உடன் வாழ்ந்து வருகிறார் விஜயகுமார்.
Arun Vijay, Anitha Vijayakumar
விஜயகுமாரின் குடும்பத்தில் அவரது மகள் அனிதா தவிர மற்ற ஐந்து பேருமே சினிமாவில் நடித்துள்ளனர். அருண் விஜய் தற்போது டாப் ஹீரோவாக வலம் வருகிறார். அதேபோல் ப்ரீதா, ஸ்ரீதேவி, கவிதா ஆகியோரும் திருமணத்துக்கு முன்னர் வரை நடித்தனர். திருமணமானதும் சினிமாவை விட்டு விலகிவிட்டனர். விஜயகுமாரின் மற்றொரு மகளான வனிதா தற்போது வரை நடித்து வருகிறார். இவருக்கு ஜோவிகா, ஜெயனிகா என இரு மகள்கள் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... நயனின் திருமணம் நடந்த அதே இடத்தில் மகளின் திருமணத்தை நடத்தும் அனிதா விஜயகுமார் - வைரலாகும் சங்கீத் போட்டோஸ்
Diya, ArunVijay
நடிகை வனிதா இதுவரை மூன்று முறை திருமணம் செய்துகொண்டுள்ளார். அந்த மூன்று திருமணமும் தோல்வியில் தான் முடிந்தது. தற்போது தனது மகள்களுடன் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார் வனிதா. விஜயகுமார் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட வனிதா தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். வனிதாவின் மகள் ஜோவிகா சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் விரைவில் ஹீரோயின் ஆக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Anitha Vijayakumar daughter Diya
இந்த நிலையில், விஜயகுமார் வீட்டில் திருமணம் களைகட்டியுள்ள நிலையில், அதற்கு தனக்கு அழைப்பு விடுக்காததற்கு பதிலடி கொடுத்துள்ளார் வனிதா. விஜயகுமாரின் மகள் அனிதாவின் மகளான தியாவிற்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. இதற்காக கடந்த சில தினங்களாக மெஹந்தி பங்ஷன், சங்கீத் பங்ஷன், ஹல்தி பங்ஷன் என களைகட்டி உள்ளது. இதில் விஜயகுமார் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் வனிதா மட்டும் பங்கேற்கவில்லை.
Vanitha reply
தியாவின் திருமணத்திற்கு தன்னை யாரும் அழைக்காத நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் சிங்கம் நடந்து வருவது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ள வனிதா, ஒட்டுமொத்த கூட்டம் ஓர் இடத்தில் சேரும்போது நீங்கள் மட்டும் தனியா இருந்தால், நீங்கள் எவ்வளவு பலம் வாய்ந்தவர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என பதிவிட்டு, தன்னை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய குடும்பத்தினருக்கு சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார் வனிதா.
இதையும் படியுங்கள்... "என் உலகமே இவங்க இரண்டு பேர் தான்".. சகோதிரியின் திருமணம்.. மெழுகு சிலை போல தயாரான அதிதி - வைரல் பிக்ஸ்!