இது என்ன லாஜிக்.? பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் பிரதீப் - ஜோவிதா பிரச்சனைக்கு சப்பைக்கட்டு கட்டும் வனிதா!
வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் - ஜோவிகா இடையே நடக்கும் போட்டியில் தன்னுடைய மகளுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக, போட்டுள்ள பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
BB Tamil 7
கடந்த 6 சீசன்களுடன், தற்போது நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை ஒப்பிட்டால்... இந்த முறை பிக்பாஸ் வீடு பிரச்சனைகளின் கூடாரமாக மாறி காட்சியளிக்கிறது. சிலர் எந்த ஒரு ஸ்ட்ரெஸும் இல்லாமல் செம்ம ஃப்ரீயாக விளையாடி வரும் நிலையில், மாயா, பிரதீப், கூல் சுரேஷ், ஜோவிகா போன்றார் வெற்றி இலக்கை குறிவைத்து... மிகவும் நேர்த்தியாக விளையாடி வருகிறார்கள். ஆனால் ஏனோ மாயாவின் விளையாட்டு இதுவரை ஈடுபட வில்லை.
BB Tamil 7
இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில், பிக்பாஸ் ரேங்கிங் டாஸ்க் கொடுத்ததை பார்க்க முடிந்தது. இதில் போட்டியாளர்கள் 1 முதல் 15 இடங்களுக்கான ரேங்கில் நிற்க வேண்டும். முதலில் செல்பவர்களுக்கே இதில் முதல் இடம் கிடைக்கும். அந்த வகையில் பிரதீப் ஆண்டனி வேகமாக வந்து முதல் இடத்தை பிடித்தார்.
ஜோவிகா இரண்டாவது இடத்தில் நின்று கொண்டிருந்தார். இதில் ஜோவிகா முதல் இடத்திற்கு தான் தகுதியானவர் என பிரதீப்பிடம் வாதாடுகிறார். இதற்க்கு பிரதீப் , ஜோவிகாவின் அக்சஸரீஸ், வார்ட் போர்டு போன்றவற்றை குறிப்பிட்டு கூறி, நான் ஒரு ஏழை... எனவே முதல் இடத்தை விட்டு கொடுக்க மாட்டேன் என மறுக்கிறார். ஜோவிகா நானும் மிடில் கிளாஸ் பொண்ணு என கூறியது பிரதீபுக்கு மேலும் கோவத்தை தூண்டுகிறது. ஜோவிகா நீ நல்ல டிரஸ், நல்ல ஷூ போடாததற்கு நான் என்ன பண்ண முடியும் என கேட்க, அதற்க்கு பிரதீப் அது உலகத்தின் தப்பு அதற்காக தான் இங்கு நிற்கிறேன் என கூறுகிறார்.
Vanitha Vijayakumar
இந்த காரசாரமான விவாதம் குறித்து, வனிதா விஜயகுமார் தன்னுடைய மகளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு வந்து, போட்டுள்ள பதிவில், "இது என்ன லாஜிக், ஏழையால் சட்டை, செருப்பு வாங்க முடியாது, அதனால் நடிகனாக வேண்டும், அதனால் படம் தயாரிக்க பணம் தேவை. ஒரு நடிகருக்கு திறமை தேவை, வாய்ப்புகளை பெற இயக்குனர்களை சந்திக்க வேண்டும். என கூறியுள்ளார். எனினும் இந்த சண்டைக்கு கமல் ஜோவிகாவுக்கு சப்போர்ட் செய்வாரா? அல்லது பிரதீப்பு பக்கம் இருந்து பேசுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D