- Home
- Gallery
- பாகிஸ்தானுக்கு ஆப்பு வச்ச மழை – அமெரிக்கா – அயர்லாந்து போட்டி ரத்து – வெளியேறிய பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு ஆப்பு வச்ச மழை – அமெரிக்கா – அயர்லாந்து போட்டி ரத்து – வெளியேறிய பாகிஸ்தான்!
அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

USA vs IRE Match
டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் முடிய உள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பலம் வாய்ந்த அணிகளான நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
Pakistan Elimination, USA Qualify
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல கடைசி வாய்ப்பாக அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இருந்தது. இதில், அமெரிக்கா தோல்வி அடைந்தால் மட்டுமே பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.
USA vs IRE Match Abandoned
ஒருவேளை இந்தப் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டாலோ அல்லது அமெரிக்கா வெற்றி பெற்றாலோ பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் நிலை இருந்தது. இந்த நிலையில் தான் நேற்று நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையின் காரணமாக டாஸ் கூட போட முடியாத சூழலில் ரத்து செய்யப்பட்டது.
Pakistan Eliminated
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலமாக அமெரிக்கா 5 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மேலும், நெட் ரன் ரேட்டில் பாகிஸ்தானை விட குறைவாகவே உள்ளது. இருந்த போதிலும் பாகிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது.
USA vs IRE Match Called Off
பாகிஸ்தானுக்கு இருந்த கடைசி வாய்ப்பும் பறிபோன நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து அணியும் வெளியேறிவிட்டது. கனடாவும் வெளியேறியுள்ளது. குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளில் எந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Pakistan Super 8 Chance
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படியில்லை என்றால் குறைவான ஓவர்களில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். அப்போது தான் ஸ்காட்லாந்து அதிக ரெட் ரன் ரேட்டுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து தோல்வி அடைந்து கடைசி போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் நெட் ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
Pakistan Eliminated
இதே போன்று இங்கிலாந்து நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி வெற்றி பெற்றால் இங்கிலாந்து 5 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.