- Home
- Gallery
- மழையால் வந்த வாழ்வு: இந்தியாவில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அமெரிக்கா!
மழையால் வந்த வாழ்வு: இந்தியாவில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அமெரிக்கா!
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலமாக 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதியும் பெற்றுள்ளது.

2026 T20 World Cup
ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசியின் மூலமாக டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் சீசனில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியனானது. இதுவரையில் 8 சீசன்கள் நடைபெற்ற நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துகின்றன.
USA Qualify into Super 8
இதன் மூலமாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கு தகுதி பெற்றன. குரூப் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் நடைபெற்ற குரூப் சுற்று போட்டிகளின்படி இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
USA vs IRE
கடைசி 2 அணிகளுக்கு இங்கிலாந்து அல்லது ஸ்காட்லாந்து மற்றும் வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணிகள் போட்டி போட்டுகின்றன. இந்த நிலையில் தான் நேற்று ஃப்ளோரிடாவில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 30ஆவது போட்டி நடைபெற இருந்தது. ஆனால் ஃப்ளோரிடாவில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக டாஸ் கூட போட முடியவில்லை.
India and Sri Lanka Host 2026 T20 World Cup
கடைசியாக போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலாஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலமாக அமெரிக்கா 5 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
T20 World Cup 2026
சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்கா முன்னேறியதன் மூலமாக வரும் 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் 10ஆவது டி20 உலகக் கோப்பை தொடருக்கு அமெரிக்கா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
USA Qualify into T20 World Cup 2026
அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
USA Super 8
பாகிஸ்தான் மட்டுமின்றி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்துக்கு எதிரான போட்டியானது நடைபெற்று அதில் அமெரிக்கா தோல்வி அடைந்திருந்தால் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.