அடுத்த ஹீரோயின் ரெடி.! அழகில் அம்மா ஊர்வசியை பீட் பண்ணும் குஞ்சட்டாவின் லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்..!
நடிகை ஊர்வசியின் மகள் குஞ்சட்டாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
Actress Urvasi
தமிழ் சினிமாவில், தனது தன்னிகரற்ற நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஊர்வசி. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.
Debut in Bhagyaraj movie
இவர் தமிழில் இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கி, ஹீரோவாக நடித்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து, ரஜினி, கமல், உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.
முன்னணி நடிகராக இருக்கும் போதே மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரைத் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இவர்களுக்கு குஞ்சட்டா என்கிற மகள் ஒருவர் இருந்த நிலையில், இவர் அம்மா - அப்பா என இருவருடனும் வாழ்ந்து வந்தார்.
இவர்களுக்கு குஞ்சட்டா என்கிற மகள் ஒருவர் இருந்த நிலையில், இவர் அம்மா - அப்பா என இருவருடனும் வாழ்ந்து வந்தார். விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் ஊர்வசி, கடந்த 2013 ஆம் ஆண்டு, சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஒரு ஆண் குழந்தையை தன்னுடைய 49 வயதில் பெற்றெடுத்தார்.
தற்போது உருவசிக்கு 50 வயதாகும் நிலையில், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்... ஊர்வசி தன்னுடைய மகள் குஞ்சட்டாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை, வெளியிட ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
மேலும் குஞ்சட்டாவின் புகைப்படத்தை பார்த்து, சிலர் அடுத்த ஹீரோயின் ரெடி ஆகிவிட்டார் என்று, கூறி வருவதால்... விரைவில் இவர் ஹீரோயினாக அறிமுகமாவாரா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D