அசால்ட்டா 194 ரன்களை சேஸிங் செய்த அமெரிக்கா – பாகிஸ்தானுக்கு வார்னிங்!
டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் கனடா அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

United States vs Canada, 1st Match,
அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று டல்லாஸில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கனடா 194 ரன்கள் குவித்தது.
United States vs Canada, 1st Match,
ஆரோன் ஜான்சன் மற்றும் நவ்னீத் தலிவால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். இதில் ஜான்சன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பர்கத் சிங் 5 ரன்களிலும், தலிவால் அதிரடியாக விளையாடி 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
United States vs Canada, 1st Match,
அதன் பிறகு வந்த நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்கள் எடுத்தார். தில்ப்ரீத் சிங் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் மோவ்வா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக கனடா அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது.
United States vs Canada, 1st Match,
பவுலிங்கைப் பொறுத்த வரையில் அலி கான், ஹர்மீத் சிங், சிஜே ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் கடின இலக்கை துரத்திய அமெரிக்கா அணியில் தொடக்க வீரர் ஸ்டீவென் டெயிலர் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கேப்டன் மோனாங்க் படேல் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
United States vs Canada, 1st Match,
இவரைத் தொடர்ந்து ஆண்ட்ரீஸ் கோஸ் மற்றும் ஆரோ ஜோன்ஸ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஆண்ட்ரீஸ் கோஸ் 46 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆரோன் ஜோஸ் டி20 உலகக் கோப்பையில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
United States vs Canada, 1st Match,
அவர் 40 பந்துகளில் 4 பவுண்டரி, 10 சிக்ஸர் உள்பட 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
United States vs Canada, 1st Match,
இந்த வெற்றியின் மூலமாக அமெரிக்கா அதிக ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 169, 155 மற்றும் 154 ரன்களை சேஸ் செய்திருந்த அமெரிக்கா முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 195 ரன்களை சேஸ் செய்துள்ளது.
United States vs Canada, 1st Match,
மேலும், டி20 கிரிக்கெட்டில் 3ஆவது முறையாக அதிக ரன்களை சேஸ் செய்துள்ளது.
230 ரன்கள் - இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா வான்கடே - 2016
206 ரன்கள் – தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் – ஜோபர்க் - 2007
195 ரன்கள் – அமெரிக்கா vs கனடா - டல்லாஸ் 2024 *
193 ரன்கள் – வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, வான்கடே - 2016
192 ரன்கள் - ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் – 2010
United States vs Canada, 1st Match,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனாக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்:
11 கிறிஸ் கெயில் vs இங்கிலாந்து, வான்கடே - 2016
10 கிறிஸ் கெயில் vs தென் ஆப்பிரிக்கா – ஜோபர்க் - 2007
10 ஆரோன் ஜோன்ஸ் vs கனடா, டல்லாஸ் - 2024 *
8 ரிலே ரோஸோவ் vs வங்கதேசம், சிட்னி - 2022
United States vs Canada, 1st Match
அமெரிக்கா:
மோனாங்க் படேல் (கேப்டன், விக்கெட் கீப்பர்) ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரீஸ் கோஸ், ஆரோன் ஜோன்ஸ், கோரி ஆண்டெர்சன், ஹர்மீத் சிங், நிதிஷ் குமார், ஷாட்லி வான் ஷால்வ்க், அலி கான், ஜஸ்தீப் சிங், சௌரவ் நெட்ரவால்கர் மிலிண்ட் குமார், நிசார்க் படேல், நோஷ்துஷ் கெஞ்சிஜே, ஷயன் ஜஹாங்கிர்.
United States vs Canada, 1st Match
கனடா:
ஷ்ரேயாஸ் மோவ்வா (விக்கெட் கீப்பர்), சாட் பின் ஜாஃபர் (கேப்டன்), நவ்னீத் தலிவால், ரய்யான் பதான், நிக்கோலஸ் கிர்தன், தில்ப்ரீத் சிங், ரவிந்தர்பால் சிங், திலியன் ஹெலிங்கர், ஜெரெமி கோர்டன், ரிஷிவ் ராகவ் ஜோஷி, ஜுனைத் சித்திக், பர்கத் சிங், நிகில் டட்டா, கலீல் சனா
United States vs Canada, 1st Match
இந்தப் போட்டியைத் தொடர்ந்து அமெரிக்கா வரும் 6 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி டல்லாஸில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.