MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரூ.65 கோடியில் ஆடம்பர வீடு.. பல சொகுசு கார்கள்.. 27 வயதில் மகாராணி போல் வாழும் ஸ்ரீதேவி மகள்..

ரூ.65 கோடியில் ஆடம்பர வீடு.. பல சொகுசு கார்கள்.. 27 வயதில் மகாராணி போல் வாழும் ஸ்ரீதேவி மகள்..

தற்போது 27 வயதாகும் ஜான்வி கபூர் சொகுசு கார்கள், ஆடம்பர பங்களா என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

2 Min read
Author : Ramya s
Published : Jun 09 2024, 09:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் கோஸ்ட் ஸ்டோரீஸ், குஞ்சன் சக்சேனா, ரூஹி என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். சமீபத்தில் Mr. & Mrs. Mahi என்ற படத்தில் அவர் நடித்திருந்தார்.

27

தற்போது 27 வயதாகும் ஜான்வி கபூர் சொகுசு கார்கள், ஆடம்பர பங்களா என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஜான்வி கபூரிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

37

மும்பையில் ரூ.65 கோடி மதிப்பில் ஆடம்பர வீடு

மும்பையின் பாந்த்ராவில் ஜான்வி கபூருக்கு சொந்தமாக ரூ.65 கோடி மதிப்பிலான ஆடம்பர வீடு உள்ளது. 8669 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த பங்களாவில் பல சொகுசு வசதிகளுடன் ஒரு தனியார் நீச்சல் குளமும் உள்ளது.

47

சென்னையில் ஆடம்பர வீடு

ஜான்வி குடும்பத்தினர் சென்னையில் ஒரு ஆடம்பரமான மாளிகையை வைத்திருக்கின்றனர். 4 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த மாளிகை நடிகை ஸ்ரீதேவி வாங்கிய முதல் சொத்துக்களில் ஒன்றாகும்.. கடற்கரையை பார்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த வீடு, பசுமையான தோட்டம், வெளிப்புற நீச்சல் குளம், நீரூற்று, மர தளபாடங்கள் என அரிய கலைப்பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஜான்வி குடும்பத்தினருக்கு சொந்தமான சென்னை மாளிகையானது பாரம்பரிய மற்றும் சமகால பாணிகளின் கலவையாக உள்ளது.

57

மெர்சிடிஸ் மேபேக் S560

பாலிவுட்டில் மெர்சிடிஸ் மேபேக் S560 வைத்திருக்கும் சில பிரபலங்களில் ஜான்வி கபூரும் ஒருவர். இந்திய சந்தையில் சுமார் ரூ.1.94 கோடி விலையுள்ள ஆடம்பர கார், சீட் மசாஜர்கள், மினி ஃப்ரிட்ஜ், பனோரமிக் சன்ரூஃப், சுற்றுப்புற விளக்குகள் மற்றும் பல போன்ற அற்புதமான இன்-பில்ட் அம்சங்களை கொண்டுள்ளது..

67
BMW 3 Series Gran Limousine M Sport Pro Edition

BMW 3 Series Gran Limousine M Sport Pro Edition

BMW X5

95 லட்சம் ரூபாய் மதிப்பிலான BMW X5 காரையும் ஜான்வி சொந்தமாக வைத்துள்ளார். TwinPower Turbo V8 இன்ஜின், சொகுசு கார் அதிகபட்சமாக 261 bhp ஆற்றலையும், 620 Nm டார்க்கையும் உருவாக்க முடியும், இது காரை வெறும் 6.5 வினாடிகளில் 0 - 100 கி.மீ வரை பயணிக்கும்

 

77

ஜான்வி கபூர் தனது BMW X5 மற்றும் Mercedes Maybach S560 தவிர, ரூ. 2.7 கோடி மதிப்புள்ள Lexus LX 570, ரூ. 1.62 கோடி மதிப்புள்ள Mercedes Benz S-Class மற்றும் சுமார் ரூ. 67 லட்சம் மதிப்புள்ள Mercedes GLE 250d ஆகிய சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
விலையுயர்ந்த கார்கள்
ஜான்வி கபூர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved