School College Holiday: ஆகஸ்ட் 28ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியாக போகும் அறிவிப்பு!
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மகா கும்பாபிஷேகத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Kanchipuram Ulagalantha Perumal Temple
காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம் மற்றும் திருநீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்களை கொண்ட ஒரே திருத்தலமாக ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி, இடது கால் தூக்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பல்வேறு சிறப்பு மிக்க இக்கோவிலில் 2007ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Ulagalantha Perumal Temple
இந்நிலையில் இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து உலகளந்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.
இதையும் படிங்க: School College Holiday: ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அறிவிப்பு!
Maha Kumbabishekam
மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் ஆறு யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு வரும் 25ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 28 அன்று புதன்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த, கும்பாபிஷேகத்தில் காண பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: School Holiday: குட்நியூஸ்! ஆகஸ்ட் 24, 25, 26 ஆகிய 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!
School Holiday
ஆகையால் அன்றை தினம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விரைவில் அறிவிப்பார் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.