12 வயது சிறுமிகூட்டு பலாத்காரம்! ரத்தம் சொட்ட சொட்ட அரை நிர்வாணத்துடன் வீடு வீடாக சென்று உதவி! வீடியோ வைரல்
12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரத்த காயங்களுடன் அரை நிர்வாணத்துடன் ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி உதவி கேட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பட்நகர் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் 12 வயது சிறுமி கொடூர கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு விரட்டி அடித்துள்ளனர். பின்னர் அந்த சிறுமி ரத்த காயங்களுடன் அரை நிர்வாணத்துடன் நடந்து சென்றுள்ளார். அப்பகுதியில் இருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவை தட்டி உதவி கேட்டுள்ளார். ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை.
இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த சிறுமி ஆசிரமம் ஒன்றை அடைந்துள்ளார். அங்கிருந்த பூசாரி சிறுமிக்கு உதவி செய்து மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். சிறுமியை பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
தற்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள். சிறுமி தன்னுடைய முகவரியை தெரிவிக்க முடியாத சூழலில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.