இதுவரையில் வந்ததே பெருசு: சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்த உகாண்டா!
உகாண்டா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 18ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

West Indies vs Uganda, T20 World Cup 2024
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 18ஆவது போட்டி கயானாவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்தது. பிராண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
West Indies vs Uganda, T20 World Cup 2024
இதில், பிராண்டன் கிங் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 44 ரன்களில் வெளியேற, சார்லஸ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ரோவ்மன் பவல் 23 ரன்களிலும், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த ஆண்ட்ரே ரஸல் 30 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது.
West Indies vs Uganda, T20 World Cup 2024
பின்னர், கடின இலக்கை துரத்திய உகாண்டா அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முதல் பின்வரிசை வீரர்கள் வரிசையாக ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஜூமா மியாகி 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக உகாண்டா 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
West Indies vs Uganda, T20 World Cup 2024
வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் அகீல் ஹூசைன் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அல்சாரி ஜோசஃப் 2 விக்கெட்டும், ரோமாரியோ ஷெப்பர்டு, ஆண்ட்ரே ரஸல் மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
West Indies vs Uganda, T20 World Cup 2024
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் வரிசையாக 6ஆவது வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 2012 -13 ஆம் ஆண்டுகளில் 7 வெற்றிகளை பெற்றிருந்தது. 2017 ஆம் ஆண்டு 5 வெற்றிகளை பெற்றிருந்தது.
West Indies vs Uganda, T20 World Cup 2024
இந்தப் போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக வெஸ்ட் இண்டீஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
West Indies vs Uganda, T20 World Cup 2024
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்:
172 - இலங்கை vs கென்யா, ஜோகன்னஸ்பர்க், 2007
134 – வெஸ்ட் இண்டீஸ் vs உகாண்டா, கயானா, 2024*
130 – ஆப்கானிஸ்தான் vs ஸ்காட்லாந்து, சார்ஜா, 2021
130 – தென் ஆப்பிரிக்கா vs ஸ்காட்லாந்து, ஓவல், 2009
125 – ஆப்கானிஸ்தான் vs உகாண்டா, கயானா, 2024
West Indies vs Uganda, T20 World Cup 2024
டி20 உலகக் கோப்பையில் குறைவான ரன்களில் ஆட்டமிழந்த அணிகள்:
39 - நெதர்லாந்து vs இலங்கை, சட்டோகிராம், 2014
39 - உகாண்டா vs வெஸ்ட் இண்டீஸ், கயானா, 2024*
44 – நெதர்லாந்து vs இலங்கை, சார்ஜா, 2021
55 – வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, துபாய், 2021
58 - உகாண்டா vs ஆப்கானிஸ்தான், கயானா, 2024
West Indies vs Uganda, T20 World Cup 2024
இந்த போட்டி உள்பட உகாண்டா விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. உகாண்டா கடைசியாக வரும் 15 ஆம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
West Indies vs Uganda, T20 World Cup 2024
இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 5ஆவது போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதே போன்று பப்புவா நியூ கினி அணிக்கு எதிரான 9ஆவது போட்டியில் உகாண்டா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
West Indies vs Uganda, T20 World Cup 2024
ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது. கடைசியாக வரும் 15ஆம் தேதி நடைபெறும் 32ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.