- Home
- Gallery
- தேர்தலில் மாஸ் வெற்றி... முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த விஜய் - ஆனா பாஜக, திமுகவுக்கு இல்ல.. யாருக்கு தெரியுமா?
தேர்தலில் மாஸ் வெற்றி... முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த விஜய் - ஆனா பாஜக, திமுகவுக்கு இல்ல.. யாருக்கு தெரியுமா?
தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றிய இரு தலைவர்களுக்கு நடிகர் விஜய் எக்ஸ் தளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் பாஜக கூட்டணி 294 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 231 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இதன்மூலம் மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது பாஜக.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் பாஜக அசால்டாக 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என்றும் கூறப்பட்டு இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை தவிடுபொடி ஆக்கி உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக, அதிமுக கூட்டணிகளை வாஷ் அவுட் செய்து 40க்கு 40 என நூறு சதவீத வெற்றியை பதிவு செய்திருக்கிறது திமுக கூட்டணி.
இதையும் படியுங்கள்... நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடு உடன் சேர்ந்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா? ராகுல்காந்தி சொன்ன பதில்
இந்த நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது. அதில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து உள்ளது. அதை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கூட்டணி அமோக வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. ஆட்சியை கைப்பற்றி இருக்கும் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் எக்ஸ் தளம் வாயிலாக பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். ஆனால் மத்தியில் ஆட்சியமைக்க உள்ள பாஜக மற்றும் தமிழகத்தில் 40க்கு 40 இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றியை பெற்றுள்ள திமுக போன்ற கட்சிகளுக்கு நடிகர் விஜய் எந்தவித வாழ்த்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Kamalhaasan : "சிந்தாமல் சிதறாமல் நாம் பெற்ற வெற்றி.. தமிழ் வெல்க".. வாழ்த்து மடல் வெளியிட்ட மநீம தலைவர் கமல்!