- Home
- Gallery
- உலக நாயகனுக்கே டஃப் கொடுத்த 3 நடிகைகள்.. மாஸ் ஹிட்டான 3 படங்கள் - தயாரிப்பாளராக செம ஹாப்பியான கமல்ஹாசன்!
உலக நாயகனுக்கே டஃப் கொடுத்த 3 நடிகைகள்.. மாஸ் ஹிட்டான 3 படங்கள் - தயாரிப்பாளராக செம ஹாப்பியான கமல்ஹாசன்!
Three Top Heroines Acted With Kamal : ஐந்து முதல் நீ ஆடிவந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை.. என்ற வரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் கலைஞன் தான் உலகம் நாயகன் கமல்ஹாசன்.

Kamalhaasan
அவருடைய நடிப்பிற்கு நிகர் அவரே என்றே கூறலாம், உலகமே வியந்து பார்க்கும் ஒரு மாபெரும் நடிகராக வளம்வருகின்றார் கமல்ஹாசன். நடிப்பில் இவரை மிஞ்ச ஆளே இல்லை என்று கூறினாலும் ஒரு சில திரைப்படங்களில் அவரையே மிஞ்சி நடித்து புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர் பல முன்னணி நடிகைகள். அதில் மூன்று முக்கிய நடிகைகள் குறித்தும் அவர்கள் நடித்த மூன்று திரைப்படங்கள் குறித்தும் இந்த பதிவில் காணலாம்.
Magalir Matum
"மகளிர் மட்டும்", கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கேமியோ ரோலில்தான் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்திருப்பார். இது அவருடைய தயாரிப்பில் வெளியான ஒரு சிறந்த திரைப்படம். மற்றபடி இந்த திரைப்படம் முழுக்க மூன்று நாயகிகள் தான் அந்த படத்தை தங்கள் தொழில் சுமந்து சென்று இருப்பார்கள்.
அவர்கள் தான் ரேவதி, ரோகிணி மற்றும் ஊர்வசி, மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் அவர்களும் நடித்திருப்பார். படத்தில் நடித்த அனைவரும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தினாலும், உலக நாயகனையே சற்று மிரள வைத்த நடிகை தான் ஊர்வசி. இன்றளவும் பல திரைப்படங்களில் மிக மிக நேர்த்தியான நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கிறார் அவர் என்றால் அது மிகையல்ல.
Sathi leelavathi
1995 ஆம் ஆண்டு வெளியான "சதிலீலாவதி", பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வெளியான இந்த காவியத்தை தயாரித்தது உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் தான். இந்த திரைப்படத்தில் முதல் முறையாக உலக நாயகனுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த திரைப்படத்தையே மிக அழகான திரைப்படமாக மாற்றி இருப்பார் கோவை சரளா. பழனி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து உலக நாயகனை மிரட்டிய கோவை சரளா, இன்றளவும் சிங்கிள் நாயகியாக தமிழ் திரையுலகின் மூத்த நட்சத்திரமாக இரண்டாவது ஆச்சியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
Virumandi
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான "விருமாண்டி", பல தொழில்நுட்ப புதுமைகளை இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புகுத்தினார் உலகநாயகன் கமல்ஹாசன். குறிப்பாக இந்த படத்தில் வரும் வசனங்கள் அனைத்துமே டப்பிங் இல்லாமல் லைவ் ரெக்கார்டிங் மூலம் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 10 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக அளவில் 40 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த திரைப்படத்தை தயாரித்து, இயக்கி வழங்கியது உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான். இந்த திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற ஒரு நடிகை தான் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அபிராமி. இந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் ஒரு மிகச்சிறந்த நடிகையாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களே வியந்து பாராட்டும் அளவிற்கு நடித்திருந்தார் அபிராமி.