- Home
- Gallery
- 1000 கோடி கிளப்பில் தடம் பதித்த டாப் ஹீரோஸ் இவர்கள் தான்.. ரஜினி, விஜய்லாம் லிஸ்ட்லயே இல்ல..
1000 கோடி கிளப்பில் தடம் பதித்த டாப் ஹீரோஸ் இவர்கள் தான்.. ரஜினி, விஜய்லாம் லிஸ்ட்லயே இல்ல..
இந்தியாவில் இதுவரை 1200 கோடி வசூல் செய்த படங்கள் என்ன, அந்த படங்களில் நடித்துள்ள ஹீரோக்கள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Kalki 2898 AD global collection report out
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு 100 கோடி வசூல் என்பதே மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டது. ஆனால் இப்போது நிலை மாறிவிட்டது. இப்போதெல்லாம் ரூ 500 கோடி வசூல் கூட எளிதாக கடக்கப்படுகிறது. எனவே தற்போது 1000 கோடி வசூல் என்பதே புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 1200 கோடி வசூல் செய்த படங்கள் என்ன, அந்த படங்களில் நடித்துள்ள ஹீரோக்கள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Kalki 2898 AD global collection report out
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான கல்கி 2898 ஏடி படம் மிகப்பெரிய பிளாக்ப்ஸ்டர் படமாக மாறி உள்ளது. சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவான இந்த படத்தில் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் இதுவரை உலகளவில் ரூ.1100 கோடி வசூலை கடந்துள்ளது. எனவே இந்தியாவில் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது இந்த படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருவதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் பிரபாஸின் முதல் 1000 கோடி வசூல் படம் இதுவல்ல. எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 படம் ரூ. 1800 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
பாலிவுட்டின் மிஸ்டர் பெர்பெக்ட் என்று அழைக்கப்படும் அமீர்கானின் படமும் 1000 கோடி வசூலில் இணைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் அதிக வசூல் செய்த படமாக இந்த படம் தான் உள்ளது. ஆம். அமீர்கானின் டங்கல் படம் உலகளவில் ரூ.2024 கோடி வசூல் செய்து அசத்தி உள்ளது.
அதே போல் பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானின் 2 படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான பதான் படம் ரூ.1050 கோடி வசூல் செய்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படம் ரூ.1150 கோடி வசூல் செய்துள்ளது.
1000 கோடி கிளப்பில் கன்னட நடிகர் யாஷும் இடம்பிடித்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் 2 படம் உலகளவில் ரூ. 1200 கோடி வசூல் செய்தது.
1000 கோடி கிளப்பில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளனர். 2022-ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படம் உலகலவில் ரூ.1300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.