MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கொடைக்கானல் போன கண்டிப்பா இந்த 9 இடங்களுக்கு போங்க.. வேற லெவல்ல இருக்கும்

கொடைக்கானல் போன கண்டிப்பா இந்த 9 இடங்களுக்கு போங்க.. வேற லெவல்ல இருக்கும்

கொடைக்கானலுக்கு சென்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய முக்கிய 9 சுற்றுலா இடங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Mar 16 2024, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

கொடைக்கானல் ஏரி (kodaikanal lake) : கொடைக்கானல் மையப்பகுதி இது. இப்பகுதி ஏரி மற்றும் பசுமைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்யலாம். அதுமட்டுமின்றி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஏரிக்கு அருகில் அமர்ந்து இயற்கையை ரசிக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

கோக்கர்ஸ் வாக் (coaker's walk) : இந்த அழகிய நடைபாதை மலைகள் பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளியின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது.  சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனை பார்ப்பதற்கு இந்த இடம் மிகவும் பிரபலமானது என்றே சொல்லலாம்.
 

39

பிரையன்ட் பூங்கா (bryant park) : 20 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ள இந்த இடம், பூக்கள் செடிகள் மற்றும் மரங்களைக் கொண்ட அழகிய இயற்கை தோட்டம் ஆகும். பிக்னிக் செல்ல விரும்புவோருக்கு இந்த இடம் சிறந்த தேர்வாகும். அதுமட்டுமின்றி சிறந்த நடை பயிற்சிக்கு இந்த இடம் ஏற்றதாகும்.

49

தூண் பாறைகள்(pillar rocks) : இந்தப் பகுதி கொடைக்கானலில் ஒரு முக்கியமான சுற்றுலா தளமாகும். குறிப்பாக மழைக்காலத்தில் பாறைகள் மூடுபணியல் மூடப்பட்டிருக்கும் போது, இங்கிருந்து பார்க்கும் காட்சி பிரம்மிக்க வைக்கும்.

59

பசுமை பள்ளத்தாக்கு காட்சி (green valley view) : இந்தப் பகுதியில் இருந்து கொடைக்கானலைச் சுற்றியுள்ள பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் பாறைகளின் பரந்த காட்சிகளை பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். இதற்கு 'Sucide Point' என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆனால் இது சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் பிரபலமான இடமமாகும்.

69

வெள்ளி நீர்வீழ்ச்சி (silver cascade falls) : இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீர் 180 அடி உயரத்தில் இருந்து கீழே விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சி பார்ப்பவர்களின் கண்ணை மயக்கும். எனவே, கொடைக்கானலுக்கு சென்றால் இந்த நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்து குதூகலமாகுங்கள்..

இதையும் படிங்க:  தென்னிந்தியாவில் மிஸ் பண்ணாமல் போக வேண்டிய 4 மலைவாசஸ்தலங்கள் இவைதான்..

79

குறிஞ்சி ஆண்டவர் கோவில் (kurinji andavar temple) : முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலருக்கு பெயர் பெற்றது. மலையின் உச்சியில் உள்ள கோயிலின் இருப்பிடம் சுற்றியுள்ள நிலப்பரப்பின் பரந்த காட்சிகளை வழங்குகிறது.

இதையும் படிங்க: குறைந்த பட்ஜெட்டில் கர்நாடகாவை குடும்பத்தோடு சுற்றி பார்க்க அருமையான டூர் பேக்கேஜ்.. இவ்வளவு கம்மி விலையா..

89

டால்பின் மூக்கு (dolphin nose) : இது தனித்துவமான பாறை உருவாக்கமாகும் ஏனெனில் இது பார்ப்பதற்கு டால்பின் நோஸ் வடிவில் இருக்கும். இப்பகுதியை சுற்றியுள்ள பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகள் சுற்றுலா பயணிகளுக்கு கண் கவர் காட்சிகளை வழங்குகிறது. இது மழையற்ற மற்றும் இயற்கை நடை பயணங்களுக்கு மிகவும் பிரபலமானது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

99

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி (bear shola falls) : அடர்ந்த காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியானது, 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழும் ஒரு அமைதியான நீர்வீழ்ச்சியாகும். குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் இங்கு சுற்றுலா செல்வதற்கு ஒரு சிறந்த இடமாகும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved