கெட்ட பழக்கமா அப்படினா என்ன? நிஜத்திலும் "டீ-டோட்டலராக" வாழும் டாப் 6 தமிழ் ஹீரோஸ் - சுவாரசியமான லிஸ்ட் இதோ!
Kollywood Heroes : அதிக அளவில் சம்பாதிக்கிறார்கள் என்பதனால் சினிமாக்காரர்கள் எல்லாருமே கெட்ட பழக்கம் உள்ளவர்களாக தான் இருப்பார்கள் என்கின்ற ஒரு எண்ணம் Fans மத்தியில் உள்ளது.
Anand Raj
ஆனால் உண்மையிலேயே எம்ஜிஆர், நம்பியார் தொடங்கி இன்று சிவகார்த்திகேயன் வரை பல நடிகர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் உலகில் பயணித்து, 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஆனந்தராஜ், பயங்கர வில்லனாக இருந்தாலும் இவர் ஒரு டீ டோட்டலர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sivakumar
தமிழ் திரையுலகை பொருத்தவரை "மார்க்கண்டேயன்" என்ற பெயருக்கு பொருத்தமானவர் நடிகர் சிவகுமார் தான். 82 வயதை கடந்தவர் சிவகுமார் என்று அவரை நேரில் பார்க்கும் எவராலும் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு அவர் தனது உடலை பேணிப் பாதுகாக்க ஒரே காரணம், ஒரு சிறு கெட்ட பழக்கம் கூட அவரிடம் கிடையாது.
Suriya and Karthi
தந்தையை மிஞ்சிய மகன்கள் என்று சொல்லும் அளவிற்கு, தங்களுடைய தந்தையின் வாழ்க்கைக்கு சரியான எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர்கள் தான் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக். இளம் நாயகர்களான இவர்களுக்கும் எந்த விதமான கெட்ட பழக்கமும் கிடையாது.
T Rajendar
தமிழ் திரையுலகில் கவர்ச்சி கொப்பளித்து கொண்டிருந்த காலத்திலேயே, ஹீரோ, ஹீரோயினை தொடாமலேயே காதல் திரைப்படங்களை எடுக்க முடியும் என்று நிரூபித்தவர் டி ராஜேந்தர். 69 வயதாகும் இந்த மிகச்சிறந்த கலைஞரும் எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மனிதராவார்.
Sivakarthikeyan
இன்று தமிழ் திரை உலகில் அடுத்த தளபதி விஜய் என்று கூறும் அளவிற்கு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். தனது திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் எந்தவிதமான தீய செயல்களில் ஈடுபடாதவர் அவர்.