- Home
- Gallery
- விஜய் முதல் ஷாருக்கான் வரை... டாப் 10 பான் இந்தியா நடிகர்களும், அவர்களின் வியக்க வைக்கும் சம்பள விவரமும்
விஜய் முதல் ஷாருக்கான் வரை... டாப் 10 பான் இந்தியா நடிகர்களும், அவர்களின் வியக்க வைக்கும் சம்பள விவரமும்
100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் பான் இந்தியா நடிகர்களின் டாப் 10 பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

thala ajith
அஜித்குமார்
டாப் 10 பான் இந்தியா நடிகர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இப்படத்துக்காக நடிகர் அஜித் ரூ.165 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம்.
Akshay Kumar
அக்ஷய் குமார்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்த பட்டியலில் 9ம் இடம் பிடித்துள்ளார். இவர் நடித்த பான் இந்தியா படமான ரஜினியின் 2.0 அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அவர் ஒரு படத்துக்கு ரூ.145 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
Allu arjun
அல்லு அர்ஜுன்
பான் இந்தியா நடிகர்கள் பட்டியலில் 8-ம் இடம் பிடித்திருப்பவர் அல்லு அர்ஜுன். அவரை பான் இந்தியா ஹீரோவாக உயர்த்தியது அவர் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் தான். அப்படத்தின் இரண்டாம் பாகம் த்ற்போது உருவாகி வருகிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.125 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
Kamal
கமல்ஹாசன்
இந்த லிஸ்ட்டில் சீனியர் பான் இந்தியா ஹீரோ என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் நடித்த இந்தியன் படம் 28 ஆண்டுகளுக்கு முன்பே பான் இந்தியா அளவில் ஹிட் அடித்தது. அதன்பின்னர் அண்மையில் அவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம், கல்கி போன்ற படங்கள் கமலின் பான் இந்தியா இமேஜை அதிகரித்தது. இவர் ஒரு படத்துக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
Yash
யாஷ்
டாப் 10 நடிகர்கள் பட்டியலில் நடிகர் யாஷ் 6-வது இடத்தில் உள்ளார். கேஜிஎப் படம் மூலம் அவர் பான் இந்தியா ஹீரோவாக உயர்ந்தார். அதைத்தொடர்ந்து அவர் நடித்த கேஜிஎப் 2-ம் பாகமும் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டதால் அவரின் பான் இந்தியா ஹீரோ இமேஜ் பன்மடங்கு உயர்ந்தது. இவரும் ஒரு படத்துக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
Aamir Khan
அமீர்கான்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், டாப் 10 பான் இந்தியா ஹீரோக்கள் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லால் சிங் சத்தா என்கிற பான் இந்தியா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இவர் ஒரு படத்துக்கு ரூ.275 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
இதையும் படியுங்கள்... சூர்யாவை விட அதிக சொத்துக்களுக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஜோதிகா; இவர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு இவ்வளவா?
Prabhas
பிரபாஸ்
பாகுபலி படம் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்தவர் பிரபாஸ். அப்படத்திற்கு பின்னர் அவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே பான் இந்தியா படமாக உருவாக்கப்படுகின்றன. கடைசியாக அவர் நடித்த கல்கி திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. இவர் ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
Vijay
விஜய்
டாப் 10 பான் இந்தியா ஹீரோக்கள் பட்டியலில் நடிகர் விஜய் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவருக்கு தென்னிந்தியாவில் அதிகளவு ஃபேன் பாலோயிங் இருப்பது அனைவரும் அறிந்ததே. லியோ படத்துக்கு பின் அவருக்கு நார்த் இந்தியாவிலும் மார்க்கெட் அதிகரித்தது. இதனால் தற்போது அவர் நடிப்பில் உருவாகும் கோட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இவர் ஒரு படத்துக்கு ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
Rajinikanth
ரஜினிகாந்த்
இந்த பட்டியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. அவர் நடிப்பில் வெளிவந்த எந்திரன், சிவாஜி, ஜெயிலர் போன்ற படங்கள் பான் இந்தியா அளவில் ஹிட் அடித்தன. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் கூலி படமும் பான் இந்தியா படமாக உருவாகிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.270 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
shah rukh khan
ஷாருக்கான்
டாப் 10 பான் இந்தியா நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த பதான், ஜவான் ஆகிய படங்கள் பான் இந்தியா அளவில் ஹிட் அடித்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தன. இவர் ஒரு படத்துக்கு ரூ.250 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.
இதையும் படியுங்கள்... பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.சி பட டைட்டிலை அதிரடியாக மாற்றும் விக்னேஷ் சிவன் - புது டைட்டில் குறித்த அப்டேட் இதோ