School College Holiday: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
School College Holiday: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Holiday
தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து அந்தந்த மாவட்டங்களில் பண்டிகை மற்றும் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறைக்கான உத்தரவை மாவட்ட அளவில் அந்த ஆட்சியர்கள் பிறப்பிக்கின்றனர். அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
Velankanni Cathedral Anniversary Celebration
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனையடுத்து பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. '
இதையும் படிங்க: School Holidays: பள்ளி மாணவர்களுக்கு வெளியான குட்நியூஸ்! எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ?
School Holiday
இதனை முன்னிட்டு நாகை, கீழ்வேளூர் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.
School Working Day
குறிப்பாக இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 29ம் தேதி வேலை நாளாகும் என மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.