Vegetables Price : மீண்டும் குறைந்ததா தக்காளி விலை.! கோயம்பேட்டில் உச்சத்தில் நீடிக்கும் கேரட்,அவரைக்காய் விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ், பூசணி, முள்ளங்கி, பீர்க்கங்காய் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்ற அத்தியாவசிய காய்கறிகளும் விலை உயர்வை சந்தித்துள்ளன.
வெண்டைக்காய் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25க்கும், கோவக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
TOMATO : மீண்டும் குறைந்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவுதானா.? கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
இஞ்சி விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 150-க்கும், பூண்டு ஒரு கிலோ 250 முதல் 350 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 45க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அவரைக்காய் விலை என்ன.?
காலிஃப்ளவர் ஒன்று 20 முதல் 40 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய் 40 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Special Train : மதுரை டூ தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு.! முன்பதிவு தொடங்கியதா.?
தக்காளி விலை என்ன.?
பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது