- Home
- Gallery
- Vegetable Price: சரசரவென குறைந்த தக்காளி, வெங்காயம் விலை..! கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் நிலவரம் என்ன.?
Vegetable Price: சரசரவென குறைந்த தக்காளி, வெங்காயம் விலை..! கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் நிலவரம் என்ன.?
மழையால் வரத்து குறைந்ததால் காய்கறி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் தற்போது வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி, வெங்காயம் விலை குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் 1 கிலோ 36 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நெல்லிக்காய் ஒரு கிலோ 102 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 64 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60-க்கு விற்பனையாகிறது.
முட்டைக்கோஸ் ஒரு கிலோ 08 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் 36 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இஞ்சி ஒரு கிலோ 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாங்காய் ஒரு கிலோ 110க்கும், வெண்டைக்காய் 1 கிலோ 70 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.