இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம்? எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்வில் பங்கேற்க வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு படையெடுத்தனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்த திருவிழா இன்று வரை நடைபெறுகிறது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 23-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.