Today Gold Rate In Chennai: நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.
Gold Rate
கடந்த ஜூலை 17-ம் தேதி வரை தங்கம் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை சரசரவென குறைந்து வந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது.
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,360-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,670-க்கு விற்பனையானது.
Today Gold Rate
இன்றைய (செப்டம்பர் 03) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.53,360-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,670-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,150-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,200-ஆக விற்பனையாகிறது.
Today Silver Rate
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.91.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.