- Home
- Gallery
- Today Gold Rate In Chennai: இன்று மத்திய பட்ஜெட்.. தங்கத்தின் நிலவரம் என்ன? இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
Today Gold Rate In Chennai: இன்று மத்திய பட்ஜெட்.. தங்கத்தின் நிலவரம் என்ன? இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
தங்கம் கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate
தங்கம் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,825-க்கு விற்பனையானது.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2024: நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் மாற்றம் என்ன?
Today Gold Rate
இன்றைய (ஜூலை 23) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,480-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,810-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,280-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.58,240-ஆக விற்பனையாகிறது.
இதையும் படிங்க: Gold Investment | தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? இந்த விஷயங்களை கொஞ்சம் கவனியுங்கள்!
Today Silver Rate
வெள்ளி விலை ரூ.40 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.95.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.95,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.