- Home
- Gallery
- Today Gold Rate in Chennai : அப்பாடா.. ஒரு வழியாக தங்கம் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?
Today Gold Rate in Chennai : அப்பாடா.. ஒரு வழியாக தங்கம் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

Gold rate
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
Gold Rates in Chennai
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,640க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,830க்கு விற்பனையானது.
Gold Rates in Tamil Nadu
இன்றைய (டிசம்பர் 16) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46,320-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,790ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,260ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 50,080-ஆக விற்பனையாகிறது.
Gold Rates on 16th December
வெள்ளி விலை 80 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.79.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.