Today Gold Rate In Chennai:நேற்று ரூ.600! இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா? ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை
தங்கம் விலை சரசரவென குறைய தொடங்கிய நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gold Rate
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது. சில வாரங்களுக்கு முன்னர் 3500க்கும் மேல் தங்கம் விலை குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.51,400-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,425-க்கு விற்பனையானது.
Today Gold Rate
இன்றைய (ஆகஸ்ட் 10) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.51,560-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,445-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,900-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,200-ஆக விற்பனையாகிறது.
Today Silver Rate
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.88.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.