MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விண்ணை முட்டும் கோவிந்தா கோவிந்தா கோஷம்! திருவேங்கடமுடையான் புது பஜனை கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது!

விண்ணை முட்டும் கோவிந்தா கோவிந்தா கோஷம்! திருவேங்கடமுடையான் புது பஜனை கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது!

நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவேங்கட முடையான் கோயில் (பஜனை கோவில்) புணரமைக்கப்பட்டு ஸ்ரீருக்மணி, சத்திய பாமா சமேத ஸ்ரீவேணுகோபால் கிருஷ்ணனுக்கு கும்பாபிஷேகம் பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Feb 19 2024, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tiruvengadamudaiyan Temple

Tiruvengadamudaiyan Temple

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவேங்கடமுடையான் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலை புரணரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து 18.2.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு வாஸ்து பூஜை, கலச பிரதிஷ்டை நடைபெற்றது.  

25
Tiruvengadamudaiyan Temple Kumbabhishekam

Tiruvengadamudaiyan Temple Kumbabhishekam

மாலை 4.00 மணியளவில் பகவத் பிரார்த்தனை, யஜமான சங்கல்பம், புண்யாஹ வாசனம், வாஸ்து ஹோமம், பூர்ணாஹுதிக்குப் பின்னர் தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது.  இரவு 8.00 மணிக்கு தேஜஸ்வி பட்டாச்சாரியார் தலைமையில் கிருஷ்ணகான பஜனை நடைபெற்றது.

35
Kumbabhishekam

Kumbabhishekam

தொடர்ந்து இன்று காலை 7.00 மணிக்கு கோ பூஜை, பிரதான கலச பூஜை புறப்பாடும் , திண்டிவனம் நம்மாழ்வார் சபைத் தலைவர் வீரா. வெங்கடேசன் பாகவதர் தலைமையில்  திவ்ய பிரபந்த பஜனையும் நடைபெற்றது.  தொடர்ந்து காலை 9.30 மணியளவில் மூலவர் ருக்மிணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது.  

45
Pudu Pajanai kovil Kumbabhishekam

Pudu Pajanai kovil Kumbabhishekam

பின்னர் மஹா தீபாராதனையை அடுத்து பக்தர்களுக்கு இன்று முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு 8.00 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெற உள்ளது.

55
Excellent Hicare pvt ltd

Excellent Hicare pvt ltd

இந்நிகழ்வில் சுற்றுப்புற கிராம மக்கள், பாகவதர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக Excellent Hicare pvt ltd M.D திருப்பதி  M.com கலந்து கொண்டார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved