MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Simbu : ஓட்டு போட வராதது முதல் ரெட் கார்டு பஞ்சாயத்து வரை.. சர்ச்சைகளுக்கு சிம்பு கொடுத்த தக் லைஃப் ரிப்ளை

Simbu : ஓட்டு போட வராதது முதல் ரெட் கார்டு பஞ்சாயத்து வரை.. சர்ச்சைகளுக்கு சிம்பு கொடுத்த தக் லைஃப் ரிப்ளை

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிம்பு, தன்னைப்பற்றி சர்ச்சைகள் குறித்து பேசி இருக்கிறார்.

2 Min read
Ganesh A
Published : Jun 02 2024, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Simbu

Simbu

சிம்பு என்றாலே வம்பு தான் என்கிற நிலை இருந்தது. இதனாலேயே அவரது கெரியர் கடும் சரிவை சந்தித்தது. அதுமட்டுமின்றி உடல் எடையும் அதிகரித்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதன்பின்னர் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த சிம்பு, ஆளே டோட்டலாக மாறினார். சிம்புவின் இந்த அதிரடி மாற்றத்தால் அவருக்கு சினிமாவில் மீண்டும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

24
Indian 2

Indian 2

தற்போது அவர் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசனின் மகன் கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதையும் படியுங்கள்... இந்தியன் 2 இசை வெளியீடு.. மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்.. விழாவை சிறப்பித்த யங் இயக்குனர்கள் - வைரல் வீடியோ!

34
Simbu at Indian 2 Audio Launch

Simbu at Indian 2 Audio Launch

அதன்படி, தற்போது தான் நடித்து வரும் தக் லைஃப் மற்றும் எஸ்.டி.ஆர் 48 ஆகிய இரண்டு படங்களுமே பான் இந்தியா படங்களாக உருவாகி வருவதாக தெரிவித்த சிம்பு, தான் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டவராக இருப்பது குறித்தும் பேசி இருக்கிறார். அதன்படி, காலம் தான் அதை தீர்மானிக்கிறது. இந்த உலகத்துலயே ரொம்ப கஷ்டப்படுற ஒரே ஆள் யாருன்னா, அது உண்மையை பேசுறவங்க மட்டும்தான். நான் நிறைய பேசியிருக்கேன் என தெரிவித்தார்.

44
Simbu Reply for Controversies

Simbu Reply for Controversies

ஓட்டு போடாதது ஏன் என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் ஓட்டு போட வரமுடியவில்லை என்று தெரிவித்த சிம்பு, அது தவறான ஒரு விஷயம் தான், ஆனாலும் ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு வர்ற அளவுக்கு நான் ஒன்று பெரிய ஆள் இல்லை என கூறினார். இதையடுத்து ரெட் கார்டு விவகாரம் குறித்து சிம்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சிம்பு, அதெல்லாம் ஒன்னுமில்லை. வெளியே அந்த மாதிரி நியூஸ் வருது, ஒரு சின்ன பிரச்சனைகள் இருந்தது, அதை பேசி சரிசெய்துவிட்டோம் என விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் இல்லை... ஆடியோ லாஞ்சில் இயக்குனர் ஷங்கர் கொடுத்த ட்விஸ்ட்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிலம்பரசன்
சிலம்பரசன்
தக் லைஃப்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved