- Home
- Gallery
- பிரபாஸை வைத்து பிரம்மாண்ட பக்தி படம்.. பிரபல இயக்குனர் போட்ட பிளான்.. ஆனா கடைசியில நடந்ததே வேற..
பிரபாஸை வைத்து பிரம்மாண்ட பக்தி படம்.. பிரபல இயக்குனர் போட்ட பிளான்.. ஆனா கடைசியில நடந்ததே வேற..
பிரபாஸை வைத்து முழுக்க முழுக்க ஒரு பக்தி படத்தை எடுக்க ஒரு நட்சத்திர இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு பிரபாஸும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

prabhas
நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஹீரோவாக வலம் வருகிறார். பிரபாஸ் நடிப்பில் வெளியான `கல்கி 2898’ ஏடி படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. இந்த படம் ஏற்கனவே 1000 கோடி வசூலை கடந்துள்ள நிலையில் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கிறார். ஏற்கனவே ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.
prabhas
பிரபாஸ் இதுவரை ஆக்ஷன் படங்கள், செண்டிமெண்ட் படங்கள், காதல் படங்கள், புராணக் கதைகள் கொண்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் கல்கி படத்தின் மூலம் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திலும் அவர் தற்போது நடித்துள்ளார். ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவான ஆதி புருஷ் படத்திலும் பிரபாஸ் நடித்திருந்தார்.
prabhas
ஆனால் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும் முழுமையான பக்தி படத்தில் மட்டும் பிரபாஸ் இன்னும் நடிக்கவில்லை. எனவே பிரபாஸை வைத்து முழுக்க முழுக்க ஒரு பக்தி படத்தை எடுக்க ஒரு நட்சத்திர இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு பிரபாஸும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
raghavendra rao
அவர் வேறு யாருமில்லை பிரபல தெலுங்கு இயக்குனர் ராகவேந்திர ராவ் தான். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பிரபாஸை வைத்து ஒரு படம் செய்ய வேண்டும் என்றால் முழு பக்தி படம் செய்ய வேண்டும் என்று ராகவேந்திர ராவ் கூறினார்.
raghavendra rao
பிரபாஸை வைத்து பக்தி படம் எடுக்க விருப்பம் தெரிவித்த அவர் எனினும் அந்த படம் எப்படி அமையும் என்று தனக்குத் தெரியாது எனவும், ஆனால் இது நிச்சயமாக புதியதாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். பிரபாஸும் அந்த படத்திற்கு ஓ.கே சொல்லியதாகவும், சரியான நேரம் வரும்போது மட்டுமே அவை தொடங்கும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் இந்த படம் உருவாகவில்லை.
adi purush
ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கும் பிரபாஸ் முழுக்க முழுக்க பக்தி படத்தில் நடித்தால் ரசிகர்கள் அவரை ரசிப்பார்களா என்பது சந்தேகம் தான். அந்த வகையில் அவர் கடந்த ஆண்டு ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆதிபுருஷின் தோல்விக்கு பிறகு மற்றொரு பக்தி படத்தை எடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிரபாஸ் தற்போது 5 படங்களில் பிசியாக இருக்கிறார். தற்போது அவர் `தி ராஜாசாப்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதையடுத்து பிரபாஸின் ஹனு ராகவபுடி படம் தொடங்கவுள்ளது. சந்தீப் ரெட்டி வாங்காவின் ``ஸ்பிரிட்' படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது. மேலும் ``சலார் 2' உருவாக உள்ளது. மறுபுறம் ``கல்கி 2'' படமும் உருவாக உள்ளது. அடுத்தடுத்து 5 படங்கள் இருப்பதால் இன்னும் மூன்று நான்கு வருடங்கள் பிரபாஸ் பிசியான ஹீரோவாக வலம் வருவார்.