ஐந்தாவது வாரத்தில் தளபதி விஜயின் லியோ.. படம் 600 கோடி வசூலை எட்டியாச்சா? இல்லையா? பிரபலம் தந்த பரபரப்பு தகவல்!
Leo Movie Collection : தளபதி விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியான லியோ திரைப்படம் தனது ஐந்தாவது வார பயணத்தில் உள்ளது. தற்போது இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்து ஒரு பிரபலம் பேசியுள்ளார்.
Lokesh
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் தளபதி விஜய், விரைவில் அரசியலில் அவர் நுழையப் போகிறார் என்கின்ற தகவலும் அப்பொழுது வெளியாகி வருவது அனைவரும் அறிந்ததே. அதற்கு தகுந்தார் போல பல மேடைகளில் அவர் அரசியல் சார்ந்து பேசி வருவதும் அவருடைய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூச்சுவிடுவதில் சிரமம்... 3வது நாளாக தொடரும் சிகிச்சை - விஜயகாந்த் ஹெல்த் அப்டேட்
Lokesh Kanagaraj with Vijay
இந்த சூழலில் இரண்டாவது முறையாக பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ என்கிற திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தார். இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் பலர் இணைந்து நடித்த இந்த திரைப்படம், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய ஹிட் ஆனது.
Leo movie poster
அண்டை மாநில அளவிலும், உலக அளவிலும் பல சாதனைகளைப் படைத்த லியோ திரைப்படம் தனது ஐந்தாவது வார பயணத்தில் பயணித்து வருகிறது. குறிப்பாக தீபாவளிக்கு வெளியான படங்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்காத நிலையில், இது லியோ திரைப்படத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இன்றளவும் உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் லியோ திரைப்படம் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Bismi
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் பிஸ்பி ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் லியோ திரைப்படத்தின் கலெக்ஷன் குறித்து அவர் பேசியுள்ளார். திரைப்படத்திற்கு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சுமார் 300 கோடி செலவிட்டதாகவும், வட்டியெல்லாம் சேர்த்து சுமார் 335 கோடி ரூபாய் இந்த படத்திற்காக இதுவரை செலவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 205 கோடி ரூபாயை வசூலித்த லியோ திரைப்படம், முதல் நாளில் தமிழகத்தில் 34 கோடி வசூலித்துள்ளதாக கூறியுள்ளார். அதே சமயம் உலக அளவில் இந்த திரைப்படம் தற்பொழுது வரை 585 கோடி வசூலித்துள்ளது என்றும், இன்னும் 600 கோடி வசூலை லியோ திரைப்படம் எட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார். லியோவின் தயாரிப்பு நிறுவனம், அந்த திரைப்படம் வெளியான மூன்றாவது வாரத்தில் 540 கோடி வசூல் செய்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.