வரும் 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 30-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரரும், தேசியமும், தெய்வீகமும் தனது இரண்டு கண்களாகப் போற்றியவருமான மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்த நாளை முன்னிட்டும், 61வது குருபூஜை வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 30-ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க;- வரும் 27ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
அதேபோல, மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா நாளை வெள்ளிக்கிழமை காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.