இரவில் இந்த 4 சாப்பிடவே கூடாதாம்! ஏன் தெரியுமா.?
Fruits To Avoid At Night : இரவில் சாப்பிட கூடாத பல பழங்கள் உள்ளன. மீறி சாப்பிட்டால் அவை உடலுக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். அவை என்னென்ன பழங்கள் என்று இங்கு பார்க்கலாம்.
பழங்கள் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். இருந்தாலும், பழங்களை சரியான நேரத்தில் சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. குறிப்பாக, காலை உணவுக்குப் பிறகும், மதிய உணவுக்கு முன்பும், பின்பும் சாப்பிடுவது நல்லது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் இரவில், அதுவும் தாமதமாக சாப்பிடுவது நல்லதல்ல. உங்களுக்கு தெரியுமா... இரவில் சாப்பிட கூடாத பல பழங்கள் உள்ளன. மீறி சாப்பிட்டால் அவை உடலுக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். எனவே, இரவில் எந்தெந்த பழங்களை சாப்பிடக்கூடாது என்று இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
வாழைப்பழம் : இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வாழைப்பழம் ஆற்றலை தரும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆனால், இரவில் வாழைப்பழத்தை சாப்பிட்டால் பிரச்சினையை ஏற்படுத்தும். மீறி சாப்பிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் மற்றும் தூங்குவதில் சிரமம் ஏற்படும்.
ஆப்பிள் : தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஆனால், இரவில் ஆப்பிள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம், இது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். எப்படியெனில், ஆப்பிளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் அது செரிமானத்திற்கு நல்லதல்ல. இதனால் வாயு மற்றும் அமிலத்தன்மை ஏற்படும்.
இதையும் படிங்க: 1 மாசம் 'இத' மட்டும் பண்ணுங்க.. எடையும் குறையும்..தொப்பையும் காணம போயிடும்!
ஆரஞ்சு மற்றும் திராட்சை பழங்கள் : இரவு புளிப்பு பழங்கள் சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, ஆரஞ்சு மற்றும் திராட்சை. ஏனெனில், இவற்றில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் தூங்குவதில் சிரமத்தை உண்டாக்கும். இதனால் வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மை ஏற்படும்.
இதையும் படிங்க: சாக்லேட் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் நபரா? முதல்ல இத படிங்க!!
சப்போட்டா : இரவில் சப்போட்டா சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில், சப்போட்டாவில் சர்க்கரை அதிகம் உள்ளதால், இது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் மற்றும் தூங்குவதில் சிரமம் ஏற்படும்.