- Home
- Gallery
- 2.5 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்த ‘மாருதி சுசுகி’.. கார் வாங்குபவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
2.5 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்த ‘மாருதி சுசுகி’.. கார் வாங்குபவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
ஃப்ரான்க்ஸ் முதல் ஜிம்னி வரை, மாருதி சுசுகி நிறுவனம் இந்த 4 கார்கள் மீது மாருதி சுஸுகி 2.5 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. சலுகை குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Cars Discount Offers
நீங்களும் மாருதி சுஸுகி நிறுவனத்திடமிருந்து புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், குறைந்த விலையில் கார் வாங்க உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. Fronx மற்றும் Jimny தவிர இந்த மாதம் எந்தெந்த மாடல்கள் தள்ளுபடி பெறுகின்றன என்பதை பார்க்கலாம்.
Maruti Suzuki
கிராண்ட் விட்டாரா: மாருதி சுஸுகியின் இந்த காருக்கு 55 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கிறது, இது தவிர, 3 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடியும் கிடைக்கிறது. இந்த காரின் விலை ரூ.10,99,000 (எக்ஸ்-ஷோரூம்) முதல் ரூ.19,93,000 (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.
Maruti Suzuki Offers
மாருதி சுஸுகி ஜிம்னி: மாருதியின் இந்த கார் அதிக தள்ளுபடியைப் பெறுகிறது, இந்த கார் 1 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை தள்ளுபடி பெறுகிறது, ஆனால் தள்ளுபடியின் பலன் மாருதி சுசுகி ஸ்மார்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே. இந்த காரின் விலை ரூ.12,74,000 (எக்ஸ்-ஷோரூம்) முதல் ரூ.14,79,000 (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.
330 கிமீ வரை மைலேஜ்.. உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. பஜாஜின் ஃப்ரீடம் 125.. விலை ரொம்ப கம்மி!
Maruti Suzuki Cars
மாருதி சுஸுகி பிரான்க்ஸ்: இந்த கார் ஜூலை மாதத்தில் 35 ஆயிரம் வரை தள்ளுபடி பெறுகிறது, மேலும் AMT மாடலை வாங்கினால் 5 ஆயிரம் ரூபாய் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இந்த காரின் விலை ரூ.7,51,500 (எக்ஸ்-ஷோரூம்) முதல் ரூ.12,87,500 (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.
Maruti Suzuki Discounts
மாருதி சுஸுகி பலேனோ : மாருதி சுஸுகியின் இந்த பிரபலமான கார் AMT வகைகளில் 45 ஆயிரம் வரையிலும், மேனுவல் வகைகளில் 40 ஆயிரம் வரையிலும் மற்றும் CNG வகைகளில் 20 ஆயிரம் வரையிலும் தள்ளுபடி பெறுகிறது.
Maruti Cars
இந்த காரின் விலை ரூ.6,66,000 (எக்ஸ்-ஷோரூம்) முதல் ரூ.9,83,000 (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். இந்த தள்ளுபடி தொகை ஆனது நகரங்களில் மாறுபடலாம். சலுகைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.