மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது 8 உணவுகள் இவையே!
Avoid Reheating Foods : நீங்கள் ஃப்ரிட்ஜில் உணவை வைத்து அதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுகிறீர்களா? ஆனால் அது ஆரோக்கியத்திற்கு கேடு. இப்படி உணவை ஈடுபடுத்தி சாப்பிட்டால் அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் இழக்கிறது மற்றும் பல வகையான நோய்களின் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகமாகவும் கல்லூரிகள் குறைவாகவும் இருக்கிறது. இதை மீண்டும் மீண்டும் சூடாக்கினால் அது போட்டுலிசத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி அதன் சத்துக்களும் அழிந்து, செரிமான அமைப்பு மோசமாக பாதிக்கும்.
காளான் : காளானை சாப்பிடுவது தவறு. மீதி சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு வாந்தி குமட்டல் போன்ற வயிற்று தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
அரிசி சாதம் : பாசிலஸ் செரியஸ் என்ற அதிக எதிர்ப்பு தன்மை கொண்ட பாக்டீரியா அரிசியில் உள்ளது. அரிசியை சமைக்கும் போது இது அழிக்கப்படுகிறது. ஆனால், அது குளிர்ந்ததும் இந்த பாக்டீரியா மீண்டும் வேகமாக வளர ஆரம்பிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அரிசியை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது உணவு விஷமாக மாறும்.
கீரைகள்: கீரைகளில் பொதுவாகவே ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவே உள்ளது. ஆனால், கீரையை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது அது ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.
கோழி : கோழியில் அதிகளவு பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது. எனவே இதை சரியாக சமைத்து சாப்பிடாவிட்டால், அவை நம் உடலில் சேர்ந்து விடும். முக்கியமாக, கோழியை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் போது பாக்டீரியாக்கள் எண்ணிக்கை அதிகரித்து உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
முட்டை : முட்டையில் புரதம் அதிகமாகவே உள்ளது. ஆனால், இதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் வாயு கோளாறு ஏற்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.
இதையும் படிங்க: தேனை மறந்தும் கூட இதனுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. அபாயம்!!
பிரியாணி : பொதுவாகவே பிரியாணி மீண்டும் செயல்படுத்தி சாப்பிடுவது நல்லதல்ல. ஒருவேளை நீங்கள் அடுப்பில் பிரியாணியை சூடுபடுத்தி சாப்பிட விரும்பினால், தண்ணீர், எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி சூடுபடுத்தி சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: பாகற்காயுடன் இந்த 6 உணவுகளை சாப்பிடாதீங்க! விஷயத்திற்கு சமமாம்..!
எண்ணெய் : சமையல் எண்ணெயை அதிகம் வெப்பமடைந்தால் அல்லது அதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால் அது ஆபத்தான ட்ரான்ஸ் கொழுப்பாக மாறிவிடும்.