MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும் அதிகமான மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள்!

அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும் அதிகமான மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள்!

இந்தியாவில் நடுத்தர மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், பட்ஜெட் இருசக்கர வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள பட்ஜெட் பைக்குகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Raghupati R
Published : Jun 30 2024, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Best Mileage Bikes in India

Best Mileage Bikes in India

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றும் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் லிஸ்டில் இது உள்ளது. இந்த பைக்கில் 7.91 பிஎச்பி பவர் மற்றும் 8.05 பீக் டார்க் உற்பத்தி செய்யும் 97.22 சிசி ஏர்-கூல்டு சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பைக் லிட்டருக்கு சுமார் 80 கிமீ மைலேஜ் தரும். இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.75,141 முதல் ரூ.79,986 வரை உள்ளது.

25
Best Bikes

Best Bikes

ஹோண்டா ஷைன் 125 பைக் கடந்த சில வருடங்களாக இந்தியர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்றே சொல்லலாம். நுழைவு அளவை விட சற்று அதிக பவர் கொண்ட பைக் வேண்டுமானால் இந்த பைக் நல்ல தேர்வாகும். 123.94 சிசி இன்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த பைக் 10.59 பிஎச்பி பவரையும், 11 என்எம் பீக் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கின் விலை ரூ.73,800 முதல் ரூ.83,800 வரை உள்ளது.

35
Honda Bike

Honda Bike

ஹோண்டா SP 125 பைக்கின் விலை ரூ.86,017 முதல் ரூ.90,071 வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. ரூபாய்க்குள் நல்ல பைக்கை விரும்புவோருக்கு இந்த பைக் நல்ல தேர்வாக இருக்கும். இது முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எல்இடி ஹெட்லேம்ப்களுடன் பிரீமியம் கோட் சேர்க்கிறது. இந்த மோட்டார் பைக்கில் ஐந்து கியர்களுடன் இணைக்கப்பட்ட 123.94 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 10.72 பிஎச்பி பவரையும், 10.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

45
Hero Bike

Hero Bike

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலமானது. ஐ3எஸ் தொழில்நுட்பத்துடன் வரும் இந்த பைக் ஒன்பது சதவீதம் அதிக எரிபொருளைச் சேமிக்கிறது. 97.2 சிசி சிங்கிள் ஏர் கூல்டு இன்ஜின் நான்கு வேக கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 7.91 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கின் விலை ரூ.59,998 முதல் ரூ.68,786 வரை.

55
Budget Bikes

Budget Bikes

ஹீரோ கிளாமர் பைக் 125 சிசி இன்ஜினுடன் வருகிறது. இந்த பைக்கின் விலை ரூ.80,908 முதல் ரூ.86,348 வரை உள்ளது. இந்த பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யுஎஸ்பி போர்ட் மற்றும் 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. இந்த பைக்கில் 10.39 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 124.7 சிசி எஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 10.4 என்எம் முறுக்குவிசையை உருவாக்குகிறது. இந்த பைக் வெறும் 6.7 வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தை எட்டும்.

4 புதிய கார்கள்.. 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஜூலை 24 தேதி குறித்த BMW.. இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா.?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹீரோ பைக்
ஹோண்டா பைக்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved