சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி இல்லாதது போல... ஆண்களுக்கு அனுமதி இல்லாத 7 கோயில்கள் இவையே!
Men Not Allowed Temples : இந்தியாவில் ஆண்கள் செல்லக்கூடாது 7 கோயில்கள் உள்ளது. அது என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் (கேரளா) : கேரளாவில் உள்ள இந்த கோவில் பொங்கல் திருவிழாக்கு மிகவும் பிரபலமானது. கோவிலில் லட்சக்கணக்கான பெண் பக்தர்களுக்கு கூடி பகவதி அம்மனுக்கு காணிக்கை வழக்குவார்கள். திருவிழாவின் போது கோவில் வளாகத்திற்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் (கேரளா) : கேரளாவில் இருக்கும் இந்த கோவில் துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு பெண்களை வழிபடுவதைக் குறிக்கும் நாரி பூஜை என்று சிறப்பு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழா பெண்களுக்கு மட்டுமே நடத்தப்படுவதால் ஆண்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது.
காமக்கியா கோயில் (அசாம்) : இந்தக் கோயில் இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான சக்தி பீடங்களில் ஒன்றாகும். இரு அசாமின் குவஹாத்தியிலுள்ள நிலாசல் மழையின் மேல் அமைந்துள்ளது. இது காமாக்யதேவியின் மாதவிடாய் சுழற்சியை கொண்டாடப்படுகிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடக்கும் அம்புப்பாற்று மீளாவின் போது ஆண்கள் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
பிரம்மா கோயில் (ராஜஸ்தான்) : ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள இந்த பிரம்மா கோயிலில் திருமணமான ஆண்கள் கோவில்களாக இருக்கும் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. புராணத்தின்படி சரஸ்வதியின் தாமதமான பிரசவத்திற்கு பிறகு, காயத்திரியை மணந்த இதனால் கோபம் அடைந்த சரஸ்வதி திருமணமான ஆண்கள் இந்த கோயிலுக்குள் வரக்கூடாது என்று சபித்தார்.
சந்தோஷி மாதா கோவில் (ஜோத்பூர்) : ஜோத்பூரில் இருக்கும் இந்த கோவிலில் ஆண்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. புராணங்கள் படி வெள்ளிக்கிழமை அன்று கோவிலின் அதிகரிக்கும் என்பதால், குடும்ப நல்லிணக்கத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்ய தொலைதூரங்களிலிருந்து பெண்கள் இங்கு வருவார்கள். இந்த நேரத்தில் கோவில் வளாகத்திற்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
குமரி அம்மன் கோவில் (தமிழ்நாடு) : இந்த கோவில் கன்னியாகுமரி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திருமணமான ஆண்கள் கோவிலின் உள்பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
மாதா கோவில் (பிஹார்) : பீகாரில் உள்ள முசாபூரில் இருக்கும் இந்த கோவிலில் ஆண்கள் உள்நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் கோவில் நிர்வாகம், பெண்களின் அவர்களது மாதவிடாய் சுழற்சியின் போது மட்டுமே அவர்களை அனுமதிக்கிறது. அந்த காலத்தில் ஆண் அர்ச்சகர்கள் கூட உள்ளே நுழைவது அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.