- Home
- Gallery
- Guru Peyarchi: இன்னும் மூன்று நாட்களில் குருவின் மாற்றம்...கோடீஸ்வர யோகம் தேடி வரும் ராசிகள்...இன்பம் பெருகும்
Guru Peyarchi: இன்னும் மூன்று நாட்களில் குருவின் மாற்றம்...கோடீஸ்வர யோகம் தேடி வரும் ராசிகள்...இன்பம் பெருகும்
Guru Peyarchi 2022 Palangal: குருவின் இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக நல்ல பலன்களை அளிக்கவுள்ளது. இந்தக் நேரத்தில் உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். யார் அந்த ராசிகள் உங்களின் ராசி இதில் இருக்கிறதா..? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

shukra rashifal 001
குருவின் ராசி மாற்றம் 2022
ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது சிலருக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணும்.
வியாழன் அதாவது குரு பகவான் செல்வம், பெருமை, திருமண வாழ்க்கை, குழந்தைகள் மற்றும் கல்வி போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால், ஒரு நபர் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுகிறார். அப்படியாக, இன்னும் மூன்று நாட்களில், அதாவது ஜூன் 20 ஆம் தேதி, குரு பகவான் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வார். இதையடுத்து, 22 ஏப்ரல் 2023 வரை அவர் இங்கு இருப்பார். குருவின் இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக நல்ல பலன்களை தரும். யார் அந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
guru peyarchi 2022
மேஷம்:
இன்னும் மூன்று நாட்களில் ராசி மாறும் குருவின் மாற்றம், உங்களுக்கு நல்ல காலமாக இருக்கும். இந்த நேரத்தில் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபம் உயரும். இந்த நேரத்தில் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். இந்த கால கட்டத்தில் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்த பயணம் அனுகூலமான பல நன்மைகளை அள்ளித் தரும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள்.
guru peyarchi 2022
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு, குருவின் பெயர்ச்சி பொருளாதார ரீதியாக நல்ல வகையில் இருக்கும். தொழிலில் பண ஆதாயத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உண்டாகும். சொத்து வாங்கவும் செல்வம் பெருகவும் தற்போது யோகம் உள்ளது. இருப்பினும், இந்த ராசிகள் வெளியே செல்லும் போது எச்சரிக்கை அவசியம்.
guru peyarchi 2022
சிம்மம்:
குருவின் மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் பல நன்ன பலன்களை அளிக்கும். இருப்பினும், இந்த காலத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வேலைகளிலும் வெற்றியைத் தரும். இந்த காலகட்டத்தில் பணம் மற்றும் குடும்ப சொத்து ஆதாயங்கள் கிடைக்கலாம். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
guru peyarchi2022
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். குருவின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தல்அவசியம். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். தொழிலில் லாபம் உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.