Vegetables Price : குறையும் தக்காளி விலை,! உயரும் வெங்காயம், கேரட் விலை.! காரணம் என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ளது. தக்காளி தற்போது 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. மற்ற காய்கறிகளின் விலையிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன.மழை மற்றும் அதனை தொடர்ந்து வெயிலின் காரணமாக காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளது.
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பீட்ரூட் விலை என்ன.?
முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இஞ்சி விலை நிலவரம்
சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று பத்து ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குடைமிளகாய் விலை என்ன.?
கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 140ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 300 முதல் 380க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை குறைந்தது
தக்காளியின் விலையானது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தக்காளி விலையானது 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறைவுக்கு காரணம் என்ன.?
தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் அதிகமாக இருப்பதன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அதிகமான அளவு காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது. இதன் காரணமாக ஒரு சில காய்கறிகளின் விலையானது குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அவரைக்காய், கேரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளையும் அதிகரித்து காணப்படுகிறது