Vegetables: சரசரவென குறைந்த காய்கறிகளின் விலை.!கோயம்பேட்டில் ஒரு கிலோ கேரட்,பீட்ரூட்,தக்காளி விலை இவ்வளவுதானா?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலை உயர்ந்திருந்தது. இந்தநிலையில் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்துள்ளதால் விற்பனை விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் அதகளவில் காய்கறிகளை வாங்கி சென்றனர்.
ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அந்த வகையில் தக்காளி ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்தது அவரைக்காய், பாகற்காய் விலை
நெல்லிக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும்,கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
vegetables
முருங்கைக்காய் விலை என்ன.?
காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Vegetables Price Today
வெண்டைக்காய் விலை வீழ்ச்சி
இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.