Tomato : ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்.! கோயம்பேட்டில் கிடு, கிடுவென குறைந்த விலை- காரணம் என்ன.?
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.10 ஆக குறைந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன.
தக்காளி விலை சரிவு
தக்காளி விலை கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த நிலையில் திடீரென விலையானது குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாயில் இருந்து 10 ரூபாய்க்கு குறைந்துள்ளது. தக்காளி விளைச்சல் அதிகமான காரணத்தல் கோயம்பேடு சந்தைக்கு அதிக அளவு தக்காளி லாரிகள் வந்துள்ளது. இதனால் விற்பனை விலை குறைந்துள்ளது.
வெங்காய்ம விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் விலையானது சரிந்துள்ளது அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அவரைக்காய் விலை என்ன.?
வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 60ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பீன்ஸ் விலை என்ன.?
காலிஃப்ளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Gas Cylinder Price Hike: கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
பீர்க்கங்காய் விலை என்ன.?
மாங்காய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது