கால்பந்து போட்டியில் தோல்வி.! பள்ளி மாணவர்களை பொது வெளியில் மிதித்தும் அடித்த பி.டி சார்-வெளியான ஷாக் வீடியோ
பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் தோல்வி அடைந்த மாணவர்களை உடற்பயிற்சி ஆசிரியிர் காலால் எட்டி மிதித்தும், கன்னத்தில் அடித்தும் துன்புறுத்திய வீடியோ வெளியாகி ஷாக் கொடுத்துள்ளது.
மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி
விளையாட்டு போட்டியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கிடையே போட்டியானது அந்த அந்த மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் பள்ளிகளுக்கு பரிசும், கோப்பைகளும் வழங்கப்படும்.
இது போன்ற போட்டி சேலம் மாவட்டம் மேட்டூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஏராளமான பள்ளிகள் கலந்து கொண்டன. இந்த அப்போது மேட்டூர் பகுதியில் கொளத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்த ஆசிரியர்
இந்த பள்ளியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கூடைப்பந்து போட்டியில் இப்பள்ளியின் சார்பில் பங்கேற்ற மாணவர்கள், போட்டியில் வெற்றி பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர். மாணவர்களை தரையில் அமர வைத்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், ஷூ காலால் எட்டி உதைத்துள்ளார்.
Tamilnadu Dam : தமிழகத்தின் மிக உயரமான அணைகள் எது.? எங்கே இருக்கிறது தெரியுமா.?
கூனி குறுகிய மாணவர்கள்
ஏராளமான மாணவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் நிலையில், அடிவாங்கிய மாணவர்கள் கூனி குறுகி அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதபடி உள்ளனர். இதனை பார்த்த மற்ற பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆசிரியர் மீது நடவடிக்கை
இந்த வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் தற்போது பரவி வருகிறது. இதனை பார்த்த பெற்றோர் அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என பாடம் எடுக்கும் ஆசிரியரே மாணவர்களை இப்படி மோசமாக நடத்தியது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.