Heavy Rain : கொட்டித்தீர்க்க போகுது மழை.! இந்த 5 மாவட்ட மக்கள் உஷாரா இருங்க- அலர்ட் கொடுத்த வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் கனமழை தொடங்கும் எனவும், சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், இன்று (13.08.2024) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
heavy rain
இடியுடன் மழை
நாளை (14.08.2024) கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
15.08.2024:தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20 மாவட்டங்களில் கன மழை
வருகிற 16. ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை. புதுக்கோட்டை மாவட்டங்கள். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
Tamil Nadu Rain
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36' செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.