Mettur Dam : ஒரே நாளில் கிடு, கிடுவென அதிகரித்த நீர் வரத்து.! மேட்டூருக்கு வரும் தண்ணீர் அளவு என்ன தெரியுமா.?
கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரித்தள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது.
மேட்டூர் அணை நீர் வரத்து
வானம் பார்த்த பூமியாக இருக்கும் விவசாய நிலத்திற்கு ஆண்டு தோறும் காப்பாற்றி வருவது காவிரி ஆறாகும், கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் காவிரி பல மாவட்டங்கள் கடந்து தமிழகத்திற்கு வருகிறது. கடந்த மாதம் மேட்டூர் அணை நீர்மட்டம் 35 அடி மட்டுமே இருந்தது. இதனால் இந்தாண்டு விவசாயம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்திருந்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையின் காரணமாக நீர்படிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தது.
Tasmac : தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! எப்போ தெரியுமா.? வெளியான முக்கிய அறிவிப்பு
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
இதனால் தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையும் கிடு,கிடுவென உயர்ந்து தனது முழுகொள்ளளவான 120அடியை தாண்டியது. இதனையடுத்து டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதுமாக திறக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் மழை குறைந்ததால் கடந்த வாரம் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 8 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி! பாடப் புத்தகங்களின் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?
மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறப்பு குறைந்தது. இதனால் கடைமடை வரை காவிரி செல்லுமா.? என்ற அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கர்நாடகா அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து நேற்று முன்தினம் 19ஆயிரம் அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 30ஆயிரம் அடியாக உயர்ந்தது.
Mettur dam full 12 dist warning
ஒகேனக்கல் தடை விதிப்பு
இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியில் இருந்து 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120.14 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக 21,500 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 14,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து அதிகளவில் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.