Nagai To Srilanka : இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை.! கட்டணம் எவ்வளவு தெரியுமா.? முன்பதிவு தொடங்கியதா.?
பலமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டும் கப்பல் போக்குவரத்து இலங்கைக்கு தொடங்கப்படாமல் தடைபட்டு வந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று இரவு முதல் தொடங்கப்படவுள்ளது.
நாகை டூ இலங்கை
முக்கிய வணிக போக்குவரத்து மையமாக நாகை துறைமுகம் முன்பு செயல்பட்டு வந்தது. எனவே அந்த துறைமுகத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
வேளாங்கண்ணி கடல் அலையில் சிக்கிய 3 மாணவர்கள்; கரை ஒதுங்கிய இரு உடல்கள்
கப்பல் சேவை பாதிப்பு
இதனையடுத்து கப்பல் போக்குவரத்து மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கப்பல் பயண கட்டணம் மிகவும் அதிகமாக இருந்ததால் ஒரு சில பயணிகளே பயணம் செய்யும் நிலை உருவானது. இதனையடுத்து கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வங்க கடலில் உருவான புயல் பாதிப்பு காரணமாக சுமார் 6 மாத காலத்திற்கு மேல் இந்த கப்பல் சேவை தொடங்கப்படவில்லை. இந்தநிலையில் மீண்டும் கடந்த மே மாதம் கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வெற்றிகரமாக முடிந்த சோதனை ஓட்டம்
ஏற்கனவே செரியாபாணி என்ற கப்பல் இயங்கிய நிலையில் சிவகங்கை என்ற பெயர் கொண்ட புதிய கப்பல் இந்த சேவையை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கப்பலின் சோதனை ஓட்டம் உரிய முறையில் முடிவடையாத காரணத்தால் மீண்டும் இந்த சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மீண்டும் வருகிற 16ஆம் தேதி நாகையில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் இயக்கப்படவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.
Enjoy the Ferry Ride to Sri Lanka
டிக்கெட் கட்டணம் எவ்வளவு .?
இதனையடுத்து இந்த சிவகங்கை என்ற கப்பலில் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 5000 ரூபாயும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 7500 ரூபாயும் வசூல் செய்யப்பட உள்ளது.
இந்தியர்களுக்கு விசா கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானதாகும். எனவே இந்த கப்பல் பயணத்திற்கான முன்பதிவு இன்று இரவு முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.