5ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணமா.! இனி கவுண்டர்களில் பணம் கட்ட முடியாது- இன்று முதல் புது ரூல்ஸ் அறிமுகம்
மின் கட்டணம் ரூ.5,000/-க்கு மேல் செலுத்த மின்சார வாரியம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி 5ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள மின் கட்டணத்தை இனி ரொக்கமாக பணம் செலுத்த முடியாது என அறிவித்துள்ளது.
மின் கட்டணம்- புதிய விதி அறிமுகம்
தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக நாளுக்கு நாள் மின்சார தேவை அதிகரித்துள்ளது. உணவு சமைப்பதில் இருந்து அலுவலக வேலை பார்ப்பது வரை இன்றியமையாத ஒன்றாக மின்சாரம் தேவை உள்ளது. மேலும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெரும்பாலான மக்கள் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது 5ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் வந்துள்ளது. இந்தநிலையில் தான் மின் கட்டணத்தை அருகில் உள்ள மின்சார வாரியம் அலுவலகத்தில் உள்ள கவுண்டரில் கட்ட முடியாத படி மின்சார வாரியம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மின் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
அந்தவகையில், தமிழகத்தின் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சமாக உள்ளது. வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரம் கணக்கெடுக்கப்படுகிறது. எத்தனை யூனிட் மின்சாரம் ஓடியுள்ளதோ அற்கேற்றார் போல் கட்டணம் வரும். அதனை அடுத்த 15 தினங்களுக்குள் கட்ட வேண்டும் இல்லையென்றால் மின்சாரம் துண்டிக்கபடுவது மட்டுமில்லாமல் அபராதமும் விதிக்கப்படும். கடந்த ஆண்டு மட்டும் 60ஆயிரத்து 505 கோடி ரூபாயை மின்சார வாரியம் வசூலித்துள்ளது.
செப்டம்பரில் அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு.. அகவிலைப்படியில் இவ்வளவு உயர்வா?
டிஜிட்டல் இந்தியா- ஆன்லைனில் மின்கட்டணம்
பணம் இல்லாத பண பரிவர்த்தனை என்ற அடிப்படையில் மத்திய அரசின் உத்தரவுப்படி ரூ.20 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெற கூடாது என தெரிவித்திருந்தது. இதனையேற்ற தமிழக மின்சார வாரியம் முதலில் ரூ,20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப்பணத்தை ஆன்லைனில் கட்ட தெரிவித்திருந்தது. இதனையடுத்து 10ஆயிரமாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை 5ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இனி மின்சார வாரியத்தில் உள்ள மின் கட்டண கவுண்டரில் 5ஆயிரம் ருபாய் மின் கட்டணத்திற்கு பணமாக செலுத்த முடியாது
EB bill hike
டிடி, காசோலையாக செலுத்தலாம்
இன்று முதல் (ஆகஸ்ட் 21) 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள மின் கட்டண தொகையை காசோலை, டி.டி. மூலம் மட்டுமே செலுத்த முடியும். அதே நேரத்தில் ஆன்லைனில் செலுத்த எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. ஆன்லைன் கட்டணத்திற்கு வங்கிகள் கூடுதல் பணம் செய்யமாட்டார்கள் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
வேளாங்கண்ணி தேவாலய திருவிழாக்கு போகனுமா.? இதோ போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு